காந்தியை நினைவு கூறுவோம்
காந்தியை நினைவு கூறுவோம்
தில்லையாடி வள்ளியம்மையால் மாற்றம்
தென்னாப்பிரிக்காவில் கண்ட போராட்டம்
வெள்ளையரின் ஆதிக்கத்தை ஒடுக்கும் கோட்பாடு
விவேகமுடன் எடுத்த அகிம்சையெனும் கொள்கையோடு
தேச விடுதலைக்கு முன்னெடுத்த சத்யாகிரகம்
தேச மக்களோடு சேர்ந்த கதராடை இயக்கம்
அடக்கு முறைகளை அமைதியாய் தட்டிக்கேட்டு
அடக்கினார் வெள்ளையனை சட்டம் அறிந்திட்டு
கைத்தடி கொண்டே பாரதப் பயணம்
கனிவான காந்தி பேச்சில் மக்களின் கவனம்
விடுதலை ஒன்றே வேண்டுமெனும் நோக்கம்
வெள்ளையனின் பிடியும் தளர்ந்த மார்க்கம்
தேசத்தந்தையென மகாத்மா காந்திக்கு பாராட்டு
தேச மக்களிடம் இருக்கும் காந்தி படம் போட்ட நோட்டு
முருக. சண்முகம்
சென்னை-56
Comments