அதிகப்படியான ப்ரோட்டினை உட்கொள்வது நல்லதா?

 அதிகப்படியான ப்ரோட்டினை உட்கொள்வது நல்லதா? 





ப்ரோட்டின் நமது தசைகள், எலும்புகள், முடி, நகங்கள் ஆகியவற்றை வலுப்படுத்தவும் மெருகேற்றவும் பயன்படுகின்றன. அவ்வாறு தசையை மெருகேற்றுவதற்காக அதிகபடியான ப்ரோட்டின் உட்க்கொண்டால் அது உடலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனினும் அது உடலின் சமநிலையை பராமரிக்க சிறந்தது என்று கூறுகின்றனர். இவற்றை பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறும் சில தகவல்களைப் பார்க்கலாம்.


உடற்பயிற்சியாளர்கள் தசையை வலுப்படுத்த தாங்கள் உண்ணும் உணவில் அதிகபடியான ப்ரோடினை பவுடராகவும், சிற்றுண்டிகளாகவும் சேர்த்துக்கொள்கின்றனர். அதனால் அவர்களது உடலில் அமினோ அமிலம் அதிக அளவில் சுரக்கிறது. அது பலவிதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.


இதுகுறித்து, ஜர்னர்ல் ஆஃப் நேச்சர் வெளியிட்ட ஆய்வின் படி, அதிகபடியான அமினோ அமிலம் சுரந்தால், ஆயுட் காலம் குறையலாம், எடை அதிகரிக்கலாம், எதிர்மறையான மனநிலை உருவாகலாம் என்று கூறுகின்றனர்.


அமினோ அமிலம் ஒரு குழுவாக நமது உடலில் செயல்படுகின்றன. அவற்றில் 3 முக்கியமான அமினோ அமிலங்கள் உள்ளன. அவை லியூசின், ஐசோலூசின் மற்றும் வால்ன். இவை பொதுவாக சிவப்பு இறைச்சி மற்றும் பால் ஆகியவற்றில் இருக்கின்றன.


ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் சமந்தா சாலோன் கூறுகையில், உணவில் அதிகபடியான ப்ரோடினும் குறைவான கார்போஹைட்ரேட்டும் சேர்த்துக்கொள்வதால், ஆரம்பத்தில் சில நன்மைகளைத் தந்தாலும், பிற்காலத்தில் உடல் அரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். முக்கியமாக ஆயுட்காலத்தை குறைக்கும் என்றார்.


மற்றொரு ஆராய்ச்சியாளரான பேராசிரியர் ஸ்டீபன் சிம்ப்சன் கூறுகையில், நமது உடலில் சுரக்கும் அமினோ அமிலங்கள், உடலை சமநிலையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் டிரிப்டோபன் என்ற அமினோ அமிலம் செரோடின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இது முளையை சுறுசுறுப்பாகவும், மனதை மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் நல்ல தூக்கத்தையும் தருகிறது. ஆனாலும் இவற்றில் சில தீமைகளும் இருக்கின்றன என்று கூறுகிறார்.


அத்தியாவசியமான அமினோ அமிலங்கள், புரதச் சத்து அதிகமுள்ள உணவுகளில் இருக்கின்றன. சிவப்பு இறைச்சி மற்றும் பால், கோழி, மீன் மற்றும் முட்டை ஆகியவற்றில் கிடைக்கும். இவை அனைத்தும் ஊட்டச்சத்துகளின் ஆதாரங்களாக இருக்கின்றன. சைவம் உணவு சாப்பிடுபவர்களுக்கு இந்த அமினோ அமிலங்கள் பீன்ஸ், பயறு வகைகள், நட்ஸ் வகைகள் மற்றும் சோயாக்களில் இருக்கின்றன. எனவே அதிகமானப்ரோட்டினை எடுத்து கொளவது எவ்வலவு நல்லது அல்ல என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி