மழை /உமாசங்கர் கவிதைகள்

 


மழை 

1.

பகலவனை மத்தாக்கி,

பாற்கடலை கடைந்து,

திரண்டு வந்த வெண்ணெய் மேகத்தை

ஆகாயச் சட்டியிலிட்டு

நெய்யாக உருக்கும் வேளை, குறும்புக்கார காற்று வந்து சட்டியை கவிழ்த்து விட, வேளாண்மை வேள்விக்கு நெய்யாக வடிகிறது மழை!


----------------------------------------------------------------------------------------------

2 .

மழை 

கதிர் என்னும் ஏறு பூட்டி,

கதிர் வெப்ப கமலை பூட்டி,

எழிலி சேர்த்து

ஏற்றம் இறைத்து

வான் நீலக்குளப் பரப்பில்,

வருண தேவன் தேக்கி வைத்த தண்ணீர் மேகம்,

மென்காற்றின் குளிர்கரங்கள்

திறந்து வைத்த மதகின் வழி, 

பாரெங்கும் பாய்கிறது பாசனத்திற்காய்!


 ------------------------

உமாசங்கர்Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,