சிவாஜிக்கு பால்கே விருது தராதது ஏன்?

 சிவாஜிக்கு பால்கே விருது தராதது ஏன்?

கொந்தளித்த நாகேஷ்

பெங்களூரில் நடந்த உலகத் திரைப்பட விழாவில் ஒருமுறை நாகேஷை சந்தித்தேன்.
இருவரும் திரைப்பட விழா முடியும் வரை ஒன்றாகவே இருந்தோம். அப்போது ரஜினி, கமல் சகாப்தம் தொடங்கி விட்டிருந்தது.
நான் சொன்னேன், “தலைமுறைகளைக் கடந்த நகைச்சுவை நடிகராகி விட்டீர்கள்” என்று. உடனேயே என்னைத் திருத்தினார்.
“அதற்குள் என்னை ஓய்வு பெறச் செய்துவிடுவீர்கள் போலிருக்கிறதே. இதற்கு அடுத்த தலைமுறையிலும் நான் இருக்கப் போகிறேன்” என்று நாகேஷ் சொன்னபோது நான் வியந்தேன்.
வருடங்கள் ஓடின. மீண்டும் ஒரு நாள் தற்செயலாக ஒரு திருமணத்தில் சந்தித்தபோது, பழைய சம்பவத்தை நினைவுகூர்ந்து அவர் கேட்டார்.
“என்னய்யா- இன்னும் தலைமுறை வரும். நாமும் பார்ப்போம். சரிதானே?”
நாகேஸ்வரராவுக்கு ‘பால்கே விருது’ தரப்பட்டபோது நாகேஷிடம் இருந்து போன் வந்தது.
“எங்கே இருக்கிறீர்கள்” என்று கேட்டார். “வாருங்களேன் பேச வேண்டும்” என்று அவர் சொன்னதும் செயிண்ட் மோிஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு விரைந்தேன்.
விருதுகள் எப்படி கேலிக் கூத்தாகி விட்டன என்று கோபமாகப் பேசினார். சிவாஜியை விட இந்தியாவில் ஒரு அற்புதமான நடிகர் யார்? அவருக்கு இன்னும் பால்கே விருது அளிக்கப்படவில்லையே ஏன் என்று கோபம் கொப்பளிக்கக் கேள்வி எழுப்பினார்.
“சிவாஜி செய்த தவறு, அவர் தமிழனாகப் பிறந்ததும் அவர் காங்கிரஸ்காரராக இருப்பதும்தான். தமிழனுக்காக வாதாட யாரும் இல்லை.
அவர் காங்கிரஸ்காரர் ஆக இருப்பதால் அவருக்கு விருது கிடைப்பதைக் காங்கிரஸில் உள்ள மாற்று கோஷ்டிகளே கெடுக்கின்றன.
இதை உங்களிடம் ஏன் சொல்கிறேன் என்றால் இதை நீங்கள் ஆங்கிலத்தில் எழுத வேண்டும். அப்போதுதான் நம்ம ஊர் சிங்கத்தைப் பற்றி அந்த நாிகளுக்குத் தெரியும்” என்று அவர் கூறியபோது, சக கலைஞன் மீது அவருக்கு இருந்த ஆதங்கம் என்னை நெகிழ வைத்தது.
நகைச்சுவை நடிகனாக, குணச்சித்திர நடிகனாக, கதாநாயகனாக, எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அந்தப் பாத்திரத்திற்கு மெருகூட்டும் அதி அற்புதக் கலைஞனாக, எல்லாவற்றுக்கும் மேலாகத் தனது தன்னம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் உயர்ந்த நல்லதொரு மனிதராக வாழ்ந்து மறைந்த நடிகர் நாகேஷ்க்கு பால்கே விருதை விடுங்கள், கேவலம் ஒரு பத்மஸ்ரீ விருது வழங்க வேண்டும் என்பதுகூட அரசுக்குத் தோன்றவில்லையே.
ஆம் நாகேஷுக்குப் பத்மஸ்ரீ விருது வழங்க வேண்டும் என்று தமிழகத்திலிருந்து எந்த அரசும் பரிந்துரை செய்யவில்லை.
தலைசிறந்த நகைச்சுவை நடிகரான நாகேசுக்குத் தரப்படாத பத்மஸ்ரீ விருது எங்களுக்கும் தேவையில்லை என்று நமது திரைப்படத் துறையினரும் சொல்லத் தயாராக இல்லை.
பத்மஸ்ரீ என்ன பத்மஸ்ரீ? தமிழ் ரசிகர்களின் மனதில் நிரந்தரமாகப் பத்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இந்த அமரத்துவம் பெற்ற கலைஞனுக்கு விருது பெருமை சேர்க்காது. இவர்தான் விருதுகளுக்கு பெருமை சேர்த்திருப்பார்.
– பிப்ரவாி 1, 2009 தினமணி இதழில் கலாரசிகன் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி…
நன்றி – தினமணி
நன்றி: தாய்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,