பச்சை கொடி காட்டும் மரம்/உமா சங்கர் கவிதைகள்

 பச்சை கொடி காட்டும்  மரம்

வளம் சுமந்து வரும் 

வான்மழை பொய்க்காதென்று,

வருடா வருடம்

 உழவோட்டி காத்திருக்கும்,

  வல்லேர் உழவனின்

பட்டுப் போகாத 

நம்பிக்கையின் அடையாளமாய்

, இலை கழிந்த மரக்கிளைகளில் 

வசந்தம் கூட்டி, தளராமல் தளிர்த்து நின்று, 

விண்ணின்று இறங்கும் 

அமுத ஊற்றுக்கு 

பச்சை கொடி காட்டியபடி

, காத்திருக்கிறது 

இந்த மரம்

- கவிதை ,புகைப்படம்


Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்