முதுகு வலியை நீக்கும் ''வாதமேரு முத்திரை''

 முதுகு வலியை நீக்கும் ''வாதமேரு முத்திரை''
👌செய்முறை:-


வலது கையில் கட்டை விரலின் நுனி, நடு விரல் மற்றும் சுண்டு விரல் நுனிகளைத் தொட்டுக் கொண்டிருக்கவேண்டும். அதே சமயம், இடது கையில் ஆட்காட்டி விரலின் நகத்தின் மேல் கட்டை விரலின் முதல் கோடு பொருந்தியிருக்கவேண்டும்.


👌பலன்கள்:-


தோட்ட வேலை, வீட்டு வேலை ஆகியவற்றை வெகு நேரம் செய்தல், இருசக்கர வாகனங்களை நீண்ட நேரம் ஓட்டுதல் போன்றவற்றால் ஏற்படும் முதுகுவலியையும், களைப்பையும் நீக்குகிறது. 


சரியான முறையில் உட்காராமல் தவறான முறையில் உட்கார்வதால் ஏற்படும் வலியயைப் போக்குகிறது.


தண்டுவடத்தின் வழியே செல்லும் நரம்புகளின் பாதிப்பால் ஏற்படும் முதுகுவலியைச் சரி செய்கிறது.


பயம், போதிய தூக்கமின்மை, அளவுக்கு அதிகமான உணவு, போதிய உடற்பயிற்சியின்மை ஆகிய காரணங்களாலும் சிலருக்கு முதுகுவலி ஏற்படும். இந்தவகை முதுகுவலிக்கும் இந்த முத்திரை சிறந்த தீர்வு தரும்.


இவை தவிர மூட்டுகளில் ''ஜவ்வு விலகுதல்'', எலும்புகள் தேய்மானம்'' போன்ற நீண்டகால பாதிப்பு உள்ளவர்கள், அவற்றுக்குத் தேவையான சிகிச்சையை எடுத்துக் கொண்டு அத்துடன் இந்த முத்திரையையும் செய்யும் போது விரைவில் குணமடைய வாய்ப்புள்ளது.


சில அறுவை சிகிச்சைகளுக்கு, முதுகுத் தண்டில் ஊசி போட்டு உணர்வை இழக்கச் செய்யும் முறை நடைமுறயில் உள்ளது. அதன் பின்விளைவாக ஏற்படும் முதுகுவலியையும் இது நீக்குகிறது.


பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் முதுகுவலிக்கும் இந்த முத்திரை நல்லது.


முதுகில் அதிகமான வலி இருப்பவர்கள் படுத்த நிலையில் இந்த முத்திரையைச் செய்யலாம். ஒருமுறைக்கு 4 நிமிடங்கள் என ஒரு நாளில் 4 முறைகள் செய்யலாம். குறுகிய கால வலிக்கு குறுகிய காலத்தில் நிவாரணம் கிடைக்கும். ஆனால், நீண்டகால வலிக்கு பல நாட்கள் தொடர்ந்து பயிற்சி செய்தால் தான பலன் கிடைக்கும். வலி மறைந்தவுடன் முத்திரை செய்வதை நிறுத்தி விடலாம்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,