டென்னிஸ் சாம்பியன் லியாண்டர் பயஸ் திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளார்.

 டென்னிஸ் சாம்பியன் லியாண்டர் பயஸ் திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளார்.
பனாஜி,

கோவாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த நிலையில், ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக தனது கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவாவுக்கு, அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் தலைவர் மற்றும் மேற்கு வங்காள முதல்-மந்திரியான மம்தா பானர்ஜி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்த பயணத்தில் அவர், கட்சி தொண்டர்கள் மற்றும் மீனவ சமூக மக்களை சந்தித்து பேச இருக்கிறார்.  இதன்படி, முதலில் டோனா பவுலா பகுதியில் உள்ள சர்வதேச மையத்தில் இன்று காலை 10 மணியளவில் கோவா திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்துகிறார்.

இதன் தொடர்ச்சியாக மதியம் 12 மணியளவில் பெடிம் பகுதியில் மீனவ மக்களுடன் அவர் உரையாடுகிறார்.  இதன்பின்பு மதியம் 1 மணியளவில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகிறார் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், டென்னிஸ் சாம்பியன் லியாண்டர் பயஸ் திரிணாமுல் காங்கிரசில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முன்னிலையில் இன்று இணைந்துள்ளார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,