உமாசங்கர் கவிதைகள்

 

பனைமரம்* 
 தற்சார்பு கொண்ட தமிழ் தனைச் சார்ந்து

 வளர்ந்ததால், தன்னுடைய 'கருக்கு' வாள்

 கொண்டு தமிழ்ப்பகை முடித்த 

கர்வம் கொண்டு, 

சூரியக் குழம்பின் வண்ணம் குழைத்து, 

மேகப்பஞ்சில் தீட்டும் எத்தனத்துடன்

 தூரிகையாய் வான் நோக்கி வளர்கிறது, 

பனைமரம்!

_____________________________________________________இரவு சேலை

மயங்கும் மாலைப் பொழுதில்,

மலையும் கதிரும் உரசிக் கொண்டதால்

உருவான வெப்பத் தீப்பொறிகள் பட்டு

, பஞ்சு மேகங்கள் தீப்பற்றிக் கொள்ள

, கனன்று எழுந்த கரும்புகையினின்றும்

 நூலெடுத்து,

 தனக்கான இரவுச்சேலையை

 நெய்து கொள்ள ஆயத்தமாகிறது

 அந்தி வானம்-உமாசங்கர்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,