கதாநாயகிகளின் பெயர்கள் ராதிகா, ராதா, ரேவதி

 சாதாரணமாக உங்கள் கதாநாயகிகளின் பெயர்கள் ராதிகா, ராதா, ரேவதி என்று ‘ஆர்’ எழுத்தில்தான் துவங்கும். ஆனால், சமீபத்திய படத்தில் ‘எஸ்’ (சுகன்யா) ஆக மாறியதன் மர்மம் என்ன?




என்னவோ நான்தான்
அவங்களுக்கெல்லாம் பெயர் வெச்ச மாதிரி கேக்கறீங்க! முதல் பட ஹீரோ-யின் ஒருத்தருக்கு ‘ஆர்’ ராசி-யினாலதான் மார்க்கெட் தூக்கிடுச்சுன்னு ஒரு நம்பிக்கை… அடுத்து வந்தவங்களும்
‘ஆர்’லேயே வர்ற-மாதிரி பார்த்துக்கிட்டாங்க! ஆனா, சுகன்யா மட்டும் ‘என் பேரே இருக்கட்டும்’னாங்க. அவ்வளவுதான்! மத்தபடி இதுல மர்மமெல்லாம் ஒண்ணும் கிடையாது!
ஹாலிவுட் ஸ்டைலைப் பின்பற்றி வரும் பி.சி.ஸ்ரீராமின் லைட்டிங் ட்ரெண்ட், தங்கள் படங்களிலும் இனி வருமா?!
என் படங்களில் பெரும்பாலும் க்ளோஸ்-அப் -காட்சிகள்தான் அதிகம் இருக்கும். அதாவது, உணர்ச்சிகளை முக-பாவங்களி லேயே காட்டி-விடுவது. அப்படிப் பட்ட காட்சிகளில் அம்மாதிரியான லைட்டிங்கை உபயோகித்தால் உங்களுக்கும் புரியாது; அவ்வளவு கஷ்டப்பட்டு முகபாவனை காட்டும் நடிகருக்கும் பெயரில்லாமல் போய்விடும். ஆனால், இந்த மாதிரி லைட்டிங் தேவைப்படுகிற சப்ஜெக்டாக இருந்தால் நிச்சயம் ஸ்ரீராமைப் பயன்படுத்துவேன்!
உங்கள் படத்தில் மட்டும் காட்சியமைப்பும் இசையும் அட்டகாசமாய் இணைந்து போவது எதனால்? உங்கள் படமென்றால் இளையராஜா ஏதேனும் சிறப்பாக இசை அமைப்பதுண்டா?
நாங்கள் இருவரும் ஒரே மண். எனக்கு ஏற்படுகிற சிந்தனைதான் ராஜாவுக்குள்ளும் ஓடும்! ஒரே மாதிரி, இணையான சிந்தனைகள் இருப்பதால் அந்தளவு ஒத்திசைவு ஏற்படுகிறது. மற்றபடி விசேஷமான இசையெல்லாம் எதுவும் கிடையாது.
‘காதல்’ என்பது என்ன?
காதல் என்பது உன்னையறியாமல், உன்னை நேசிப்பவளை அறியாமல் உண்டாகும் ஓர் உணர்வு! உடலில்லாமல் உணர்வில்லை; உணர்வில்லாமல் உடலில்லை. அந்த இரண்டு துருவங்களின் சந்திப்பையும் உணர்ந்தவன்தான் காதலிக்க முடியும்!
முழுக்க முழுக்க மாணவர்களுக்கு என்று ஏதாவது படம் எடுக்கும் திட்டம் உள்ளதா?
மாணவர்களுக்குன்னா எப்படி? போதிக்கிற மாதிரியா? ‘வீட்டுலதான் அப்பா போதிக்கிறாரு. வகுப்புல வாத்தியாரு போதிக்கிறாரு. நிம்மதியா இருக்கலாம்னு
தியேட்டருக்கு வந்தா, இந்த ஆளும் அதையே செய்யறாரே’னு யாரும் வரமாட்டாங்க! அப்படிப் போதிக்கிற மாதிரி ஒரு படம் எடுத்து நான் கையைச் சுட்டுக்கொண்டது போதாதா? ‘என்னுயிர்த் தோழனை’த் தான் சொல்றேன்!
இப்ப நீங்க எடுத்துக்கிட்டு வர்ற ‘நாடோடித் தென்றல்’ சர்வதேச விருது பெறுமா?
பெறாது! அது ஒரு கால கட்டத்தில் நடந்த சாதாரண காதல் கதை. அவ்வளவு-தான்! ஆனால், இனி-மேல் என் படங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டு மிகச் சிறப்பான படங்களையே உருவாக்குவது என்று முடிவெடுத்துள்ளேன். ஒன்று மட்டும் நிச்சயம்… உலக அளவில் ஒரு பரிசையாவது பெறாமல் ஓயமாட்டான்.
01-03-1992 – நேருக்கு நேர் பாரதிராஜா நன்றி – விகடன் பொக்கிஷம்
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி