நான் செய்த ஒரே குற்றம் தமிழ் படித்ததுதான்

 


நான் செய்த ஒரே குற்றம் தமிழ் படித்ததுதான், நான் தமிழனாக பிறந்ததே குற்றம். இன்னொரு குற்றம் தமிழனை வாழ வைக்க வேண்டும் என்று எண்ணியது தான். ஜெயலலிதா போன்றவர்கள் என்ன எண்ணுகிறார்கள், தமிழ்நாட்டில் இவன் பிறந்திருக்க கூடாது. இவன் பிறந்ததால் பெரியார், அண்ணா, பாரதிதாசன் போன்றோரின் கொள்கைகளை பின்பற்றி நடக்கிறான் என்பதுதான். நான் 1957ல் குளித்தலை தொகுதியில் நின்று சட்ட மன்றத்துக்கு சென்றேன். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த தாள்களை எடுத்துப் பார்க்கிறேன். அதிலே, பல ஜாதி பெயர்களின் பட்டியல் இருந்தது. ஐயர், ஐயங்கார் என்றும் வண்ணான், மருத்துவன், கருமான் என்றும் இருந்தது. உடனே, நான் அமைச்சர் கக்கனைப் பார்த்து, சந்தேகத்தைக் கேட்டேன். ஐயருக்கும், ஐயர், ஐயங்கர் என்றும் போட்டிருக்கிறது. வண்ணான், மருத்துவன் என்று இன் போடப்பட்டிருக்கிறது. நீங்கள் வண்ணார், மருத்துவர் என்று ‘ர்’ போடத்தான் மறந்து விட்டீர்களா என்று கேட்டேன். உடனே காமராஜர் கக்கனைப் பார்த்து கோபப்பட்டார். மறுநாள், இது மாற்றப்பட்டது. இந்த

வரலாற்றை ஏன் சொல்கிறேன் என்று சொன்னால். இன்று கூட நீங்கள் சட்டமன்ற பதிவேட்டை எடுத்துப் பார்க்கலாம். இந்த உணர்வு, இளமையிலேயே வந்த உணர்வு. நேற்றைய தினம் தீவுத்திடலில் நடந்த கூட்டத்தில் கூட என்ன கோரிக்கை வைத்தேன். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தமிழை ஆட்சி மொழியாக்கித் தாருங்கள். நதி நீர் பிரச்னைக்கு தீர்வு காணுங்கள். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்துங்கள், முல்லைப் பெரியார் பிரச்னைக்கு தீர்வு காணுங்கள் என்றுதானே கேட்டேனே தவிர, என் வாழ்வுக்காக, என் சுகத்துக்காக எதாவது கேட்டிருந்தால், நான் பாளையங்கோட்டையை பார்த்திருக்க மாட்டேன். தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருக்க மாட்டேன். தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த என் தம்பி கருணாநிதி என்று என்னை கட்டிப்பிடித்து, பாளையங்கோட்டை சிறையில் என் தம்பி இருக்கிற இடம்தாம், யாத்திரை தளம் என்றார் அண்ணா. அது எனக்கு கிடைத்த பாக்கியம். சில பேர் சிறைச்சாலையை சூட்டிங்கில் பார்க்கிறார்கள். நான் உங்களுக்காக வாழக்கூடியவன். எந்த தியாகத்தையும் செய்யக் கூடியவன். என்னை பற்றி யார் எதைச் சொன்னாலும், கவலைப்பட வேண்டியதில்லை
கலைஞர் உரை
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Unknown said…
Such a Very intelligent, versatile, enthusiastic personality.always positive thoughts and attitude & self-confidence

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,