சார்லஸ் பாபேஜ்
சார்லஸ் பாபேஜ் இன்று இவரின் 150வது நினைவு தினம்......!!
கணினியின் தந்தை என்றழைக்கப்படும் சார்லஸ் பாபேஜ் 1791ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி லண்டனில் பிறந்தார். 1810ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி பல்கலைகழகத்தில் இணைந்த இவர், கணிதத்தில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தினார். 1834ஆம் ஆண்டு கணிதத்தையும், எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி என்ற முதல் கணினியை இவர் உருவாக்கினார்.
தொடக்ககால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின் மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை வடிவமைத்தவர் சார்லஸ் பாபேஜ். இவர் நியமத் தொடருந்துப் பாதை அளவுக்கருவி, சீரான அஞ்சல் கட்டண முறை, கலங்கரை விளக்கு ஒளி, கீறிவிச் ரேகைக் குறியீடு, சூரிய ஒளி கொண்டு கண்களைச் சோதிக்கும் கருவி என பல கருவிகளை கண்டுபிடித்துள்ளார். இவர் தன்னுடைய 79வது வயதில் 1871ஆம் ஆண்டு மறைந்தார்
Comments