இந்தியாவிலேயே அதிக செல்வாக்கு கொண்ட முதல்வர்.. கருத்து கணிப்பில் முதலிடம் பிடித்த முதல்வர் ஸ்டாலின்

 

இந்தியாவிலேயே அதிக செல்வாக்கு கொண்ட முதல்வர்.. கருத்து கணிப்பில் முதலிடம் பிடித்த முதல்வர் ஸ்டாலின்


இந்தியாவில் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம் உள்ள மாநில முதல்வர்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளதாக சி.என்.ஓ.எஸ். ஒபினியோம் அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் செல்வாக்கு மிக்க முதல்வர்கள் தொடர்பாக சி.என்.ஓ.எஸ். ஒபினியோம் என்ற அமைப்பு அவ்வப்போது கருத்து கணிப்பு நடத்துவது வழக்கம். மாநில முதல்வர்களுக்கு மக்கள் இடையே இருக்கும் ஆதரவு , எதிர்ப்பு, அவர்கள் கொண்டு வரும் நலத்திட்டங்கள் ஆகியவற்றை வைத்து இந்த கருத்து கணிப்பு

மக்களிடம் கருத்து கேட்டு, வாக்கெடுப்பு நடத்தி சதவிகித அடிப்படையில் இந்த கணிப்பு வெளியிடப்படும். இந்தியாவின் மாநில முதல்வர்கள் அனைவர் குறித்தும் இந்த கணிப்பு நடத்தப்பட்டு அவர்களுக்கு இடையிலான ஒப்பீடும் வெளியிடப்படும்.
முதல்வர் ஸ்டாலின் இந்த சி.என்.ஓ.எஸ். ஒபினியோம் அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம் உள்ள மாநில முதல்வர்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு 79 சதவிகித மக்கள் ஆதரவு தருவதாக கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் 12 சதவிகித மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 9 சதவிகித மக்கள் நடுநிலையாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது இடம் இந்த பட்டியலில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இரண்டாம் இடம் பிடித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினை விட இவருக்கு 12 சதவிகித மக்கள் குறைவாகவே ஆதரவு தெரிவித்துள்ளனர். இவருக்கு 67.8 சதவிகித மக்கள் ஆதரவு தருவதாக கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் 15 சதவிகித மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 17.2 சதவிகித மக்கள் நடுநிலையாக கருத்து தெரிவித்துள்ளனர்.

மூன்றாம் இடம் மூன்றாம் இடத்தை உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் பிடித்துள்ளார். இவருக்கு 71 சதவிகித மக்கள் ஆதரவு தருவதாக கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் 18.4 சதவிகித மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிக எதிர்ப்பு காரணமாக இவருக்கு மூன்றாம் இடம் அளிக்கப்பட்டுள்ளது. 10.6 சதவிகித மக்கள் நடுநிலையாக கருத்து தெரிவித்துள்ளனர்.
நான்கு மற்றும் ஐந்தாம் இடம் நான்காம் இடத்தை ஒடிசா முதல்வர் நவீன் பட்நயாக் பெற்றுள்ளார். இவருக்கு 63.1 சதவிகித மக்கள் ஆதரவு தருவதாக கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் 15.3 சதவிகித மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 21.6 சதவிகித மக்கள் நடுநிலையாக கருத்து தெரிவித்துள்ளனர். ஐந்தாம் இடத்தை அசாம் முதல்வர் ஹேமந்த் பிஸ்வா சர்மா பெற்றுள்ளார். இவருக்கு 63.1 சதவிகித மக்கள் ஆதரவு தருவதாக கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் 15.3 சதவிகித மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 21.6 சதவிகித மக்கள் நடுநிலையாக கருத்து தெரிவித்துள்ளனர்.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி