ராஜாவின் அபூர்வத் தருணம்
ராஜாவின் அபூர்வத் தருணம்
இளையராஜாவின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
பண்ணைப்புரத்தில் உள்ள ராஜாவின் வீட்டில் நடந்த திருமணத்தைப் பற்றி 1997 ல் எடுத்த பேட்டியில் சொல்லியிருந்தார் இளையராஜாவின் மூத்த சகோதரியும், அவருடைய மனைவி ஜீவாவின் தாயாருமான கமலாம்பாள்.
“ரொம்பவும் கஷ்டப்பட்ட நேரத்தில் கூட அமைதியா இருக்கும் தம்பி ராசய்யா. அதோட சுபாவமே அப்படி. கடுமையா உழைக்கும்.
சென்னைக்குப் போனதும் சில மொழிகளைக் கத்துக்கிடுச்சு.
விடியற்காலை நாலு மணிக்கு எந்திரிச்சு எதையாவது கத்துக்கிட்டிருக்கும்.
சின்ன வயசிலே ஜாதகம் பார்த்தப்பவே என் மகள் ஜீவாவை ராசய்யாவுக்குத் தான் கொடுக்கணும்னு முடிவு பண்ணியிருந்தோம்.
அதன்படியே பண்ணைப்புரத்தில் எளிமையா இவங்க திருமணம் முடிஞ்சது…”
மணாவின் ‘நதிமூலம்’ நூலில் இருந்து…
நன்றி: தாய்
Comments