#குடும்பம்ஒருகதம்பம்(5 ) தொடர்) /தொலைக்காட்சி சீரியல்கள்/செல்வி சங்கர்

 குடும்பம்ஒருகதம்பம்(5 ) தொடர்

தொலைக்காட்சி சீரியல்கள்/செல்வி சங்கர்

               //////////////////////////////////////////   




  




ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் விஜய் சானல்ல ரெகுலரா பார்க்கிற ஒரு இத்துப்போன சீரியலை கர்ம சிரத்தையா பார்த்து முடிச்சேன். எப்படா சீரியல் முடியும்னு இருந்தவர், செல்வி, அந்த மொபைலை அப்படி வை உன்கிட்ட பேசணும்ன்னார். மொபைலை ஸ்டூல் மேல வச்சிட்டு, ம்ம்ம்..சொல்லுங்க.! நான் சொல்றத நீ கண்ண்டிப்பாக் கேக்கணும். கேக்கறேன், சொல்லுங்க . நாளைல இருந்து இந்த இடியாடிக் சீரியல்ஸ் பார்க்கறத நிறுத்தி அந்த நேரத்துல உருப்படியா யோகா செய்யணும். ம்ம்ம்.. சரி, செய்யறேன். அப்புறம்? அன்னைக்கு என் பிரண்ட் டாக்டர் பிரபாகரை பார்த்தேன்ல, அவன் உன்னை அரிசி சாப்பாடு எடுத்துக்கறத குறைச்சு பழம், காய்கறிகள் அதிகமா சாப்பிடச் சொன்னான், அதனால, நிறைய ஆப்பிள் பப்பாளி, கொய்யப்பழம் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன், நீ நாளைல இருந்து அதைத்தான் சாப்பிடணும். சாதம் சாப்பிடக்கூடாது, என்ன? ம்ம்ம் சரிங்க. அப்டியே சாப்பிடுறேன். இந்த பேஸ்புக் ஒரு மணி நேரம்தான் உபயோகிக்கணும், சீக்கிரமா தூங்கி, கார்த்தால அஞ்சு மணிக்கு எழுந்து(??!!) திரும்பவும் யோகா செய்யணும். அவ்ளோதானே, தப்பாமல் செய்யறேன். என்ன , நான் சொல்றதுக்கெல்லாம் மண்டைய ஆட்டிக்கிட்டு சரி சரின்றே? ஒழுங்கா செய்வே இல்ல? ச்சே..என்னங்க இப்டிக் கேட்டுட்டீங்க? நாளைல இருந்து பாருங்களேன்.! நான் எப்டி எல்லாம் மாறுறேன்னு. சரி, இப்ப எழுந்து டிரஸ் மாத்திட்டு வாங்க. எதுக்கு.? மாத்திட்டு வாங்களேன். கொஞ்சம் கடைக்கு போகணும். என்னென்ன சாமான்கள் வேணும்னு சொல்லு, நான் வாங்கிட்டு வரேன்.! இல்லைங்க, மளிகை சாமான் வாங்கறதுக்கு இல்ல. இது வேற.! வேறன்னா? (லைட்டா ஜெர்க் ஆவது தெரிந்தது) அம்பிகா போகணும். (சேட்டு துணிக்கடை!) டிரெஸ் மாத்திட்டு வாங்க. செல்வி, இந்தா. என்னங்க இது, எதுக்கு என் மொபலை கொடுக்கறீங்க.? நீ பேஸ்புக்கே பாரு!! #குடும்பம்ஒருகதம்பம்

குடும்பம்ஒருகதம்பம்


செல்வி சங்கர்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி