இன்றையஉலக தபால் நாளை முன்னிட்டு
அனன்யாவின் நினைவலைகள்
முன்னெல்லாம் இன்லண்ட் கவரில் தான் லெட்டர் வரும். அதையும் கண்டிப்பா மிஸ்ப்ரனவுன்ஸ் பண்ணி இங்க்லேண்ட் கவர்ன்னு தான் சொல்லிண்டு இருப்போம். அப்புறம் என்வலப்(அது ஆன்வலோப்பாம். அதையும் மிஸ்ப்ரனவுன்ஸ் பண்ணாம நிம்மதியா இருக்க மாட்டோம். (உள்ளுக்குள்ளே எத்தனை பேப்பர் வேணும்ன்னாலும் வைச்சுக்கலாம்) அப்புறம் போஸ்டு கார்ட். 15 பைசா தான். இன்லண்ட் 40 பைசா ஐ தின்க். அதையும் போஸ்ட் ஆஃபீஸிலிருந்து அப்படில்லாம் கத்தையா வாங்கி வைச்சுண்டு எல்லாம் எழுத முடியாது. ஒண்ணோ ரெண்டோ வாங்கி வைச்சுண்டா அப்பப்போ லெட்டர் எழுதி போஸ்டு பண்ணிக்கலாம். மறுபடியும் தேவைன்னா வாங்கிக்கலாம். அதென்னமோ தெரியாது என்ன மாயமோ தெரியாது, அந்த லெட்டர் போஸ்ட் பண்ணும் வேலை மட்டும் என் தலையில் தான் எப்போவும் விழும். போஸ்ட் பண்ணினியா பண்ணினியான்னு ஆயிரம் ஃபாலோ அப் மதர் தெரஸா...
எந்த லெட்டரா இருந்தாலும் அதை போஸ்ட் பாக்ஸில் போடும் போது அப்படி ஒரு பதட்டமா இருக்கும். போஸ்ட் பண்ணலாமா இதை, சேஃப் தானான்னு என்னமோ படபடப்பு. (சின்ன வயசுலேயே எனக்கு பிபி இருந்திருக்கு போல்ருக்கு)
ப்ளூ இன்லண்ட் கவரில் அவ்வா நுணுக்கி நுணுக்கி எழுதியிருப்பாங்க. ஆப்டிமம் யூட்டிலைசேஷன் இட் சீம்ஸ். ஒட்டும் இடத்துல கூட விஷயம் எழுதுவாங்க. ஆன்வலோப் லாம் ரொம்ப எக்ஸ்பென்ஸிவ் மோட் ஆஃப் லெட்டர் ரைட்டிங். அதெல்லாம் பெரிய பெரிய கம்பனிகள் அப்பாய்ன்மெண்ட் ஆர்டர் அனுப்பு உபயோகப்படுத்துவாங்க. நம்ம லெவலுக்கு கார்டோ இன்லண்டோ தான் பெஸ்டு. ஏர்மெய்ல் லெட்டர்லாம் வந்தா, அவாத்துல யாரோ துபாய்ல இருக்கறதா ஐதீகம். ஸ்கூலிலிருந்து வரும் பாஸ், டீட்டெயிண்ட் மாதிரியான சீல் போட்ட கார்டுகள் பார்க்க பரவசமா இருக்கும். சீல் போட்டுட்டு இவ்ளோ இடத்தை எழுதாம வேஸ்ட் பண்ணிருக்காங்களே?ன்னு தோணும். தஷிண் பாரத சபாவிலிருந்து எனக்கே எனக்கு வரும் ”ராஷ்டிரபாஷா பரீட்சையில் இவ ஃபெயில்” கார்டுகள் கசப்பானவை. மாசாமாசம் வரும் சமாச்சார் பத்ர - சூர மொக்கை. அதை படிக்கச்சொல்லி மதர் பச்சிளம் பாலிகாக்களை துன்புறுத்துவார். யாரு பாலிக்காவா? நாந்தேன்...
சில லெட்டர்ஸ் படிக்க மஹா சுவாரஸ்யமா இருக்கும். எங்க கண்ணாண்ணா எழுதினா அதுல ஹாஸ்யம் நிறைஞ்சிருக்கும். அவ்வா, என் மாமா பையனை பத்தி லெட்டர் எழுதுவார். அவந்தான் அவங்க குல தெய்வம். அவ்ளோ ப்ரியம். அவன் என்னென்ன பேசினான்னு ஞாபகம் வைச்சுண்டு வாரத்துல மூணு லெட்டர் எழுதுவாங்க. படிக்க அவ்வளோ ரசனையா இருக்கும். இடது முட்டியை மடிச்சுண்டு அது மேல டயரியை வைச்சு, அது மேல இன்லண்ட் கவரை வைச்சுண்டு, கருப்பு ஃப்ரேம் கண்ணாடி போட்டுண்டு வாசல்ல உக்காந்து பேனாவால் லெட்டர் எழுதும் அவ்வாவின் பிம்பம் இந்த கட்டுரை எழுதும்போது என் மனக்கண்ல வருது.
சில கடிதங்கள் டெம்ப்ளேட் கடிதங்களா இருக்கும். படிக்கவே வேண்டாம். பரஸ்பரம் நலம் விசாரணை, உடல் நிலை விசாரணை, குழந்தைகள் படிப்பு விசாரணைன்னு இருக்கும். எனக்கு கஸின்ஸ் திருச்சிலேந்து லெட்டர் எழுதுவா. பெரியப்பா பெண், அத்தை பெண்கள். அது எனக்கு பயங்கர சந்தோஷமா இருக்கும் படிக்க. (நம்மளையெல்லாம் மதிச்சு லெட்டர் எழுதுறாங்களேன்னு). 11த் லீவ்ல ஸ்கூல்மெட்ஸ் ஒருத்தருக்கொருத்தர் தமிழ் பேப்பர்2 கட்டுரை மாதிரி வெக்கேஷனில் நான் என்ன செய்தேன் ரேஞ்சுல கார்டு எழுதிப்போடுவா. போஸ்ட் மேன் கேட் கதவை மூணு வாட்டி சத்தம் பண்ணிட்டு பால் பையில் லெட்டரை போட்டுட்டு போவார். அம்மா....... லெட்டர் வந்திருக்கும்மான்னு கொல்லை வரைக்கும் ஓடுவோம். லெட்டர் தானே.. நடந்து போய் கொடுத்தா தான் என்ன? எதுக்குத்தான் எக்ஸைட் ஆகறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாத தினங்கள் அவை. அக்கிரஹாரம் முழுக்க ஓடி கடுதாசி வந்திருக்குன்னு தமிழ் சினிமா ரேஞ்சுக்கு கத்தினா, அவாத்துக்குயாரோ கெஸ்ட் இன்னைக்கு சாயந்திரமோ நாளைக்கோ வருவாங்கங்கறது ஐதீகம்.
இது தவிற நூத்துக்கணக்குல பொங்கல், வாழ்த்து, தீபாவளி வாழ்த்து.. sometimes, I feel that we belonged to a generation which found optimum happiness even in the simplest of the things. இன்னைக்கு உலக அஞ்சல் தினமாம். இப்படி ஒரு காலம் இருந்ததுன்னு ஒரு மினிமல் டாக்யுமெண்டேஷன் வேண்டியிருக்கு இல்லையா? அதுக்குத்தான் இந்த போஸ்ட்.
எழுதறதுக்கு விஷயமே இல்லாட்டாலும் staying connected with our beloved onesங்கற கமிட்மெண்ட் இன்லண்ட் லெட்டர் வழியா அப்போ இருந்தது.
அனன்யா மகாதேவன்
Comments