உலகளாவிய தமிழ் பள்ளியின் சார்பாக மாபெரும் இணையவழி கையெழுத்துப் போட்டி
உலகளாவிய தமிழ் பள்ளியின் சார்பாக மாபெரும் இணையவழி கையெழுத்துப் போட்டி
கடந்த 10ஆம் தேதி சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, உலகளாவிய தமிழ் பள்ளியின் சார்பாக மாபெரும் இணையவழி கையெழுத்துப் போட்டி நடைபெற்றது.
ஏறத்தாழ 80 மாணாக்கர்கள் யூகே, இந்தியா மற்றும் மலேசியாவில் இருந்து பங்கு கொண்டனர்
.நிகழ்ச்சிக்கு திருமதி ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமை வகித்து சிறப்பித்தார். இந்தக் காலத்தில் கையெழுத்தின் அவசியத்தை மாணாக்கர்கள் அறிந்து கொள்ள, அருமையான முன்னெடுப்பாக இந்நிகழ்ச்சி அமைந்ததை மனதார பாராட்டினார்.
திருமதி ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்
பிரித்தானியா பரிட்சை சபையின் தலைவர் சிவா பிள்ளை ஐயா அவர்களும் பிரித்தானிய தமிழ் வானொலியின் தலைவர் எழில் ஆனந்த் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தங்களின் செறிவான கருத்துக்களை பகிர்ந்தனர்.
சிவாபிள்ளை ஐயா
Chairperson British Tamil Exam Board
பிரித்தானிய தமிழ் வானொலியின் தலைவர் எழில் ஆனந்த்
மேலும் நடுவர்களாக இருந்து மாணாக்கர்களின் கையெழுத்துப் பிரதிகளை மதிப்பீடு செய்த மேதகு தமிழார்வலர்களான அபுல்ஹசன் ஐயா( முன்னாள் தலைவர் மஸ்கட் தமிழ்ச் சங்கம்), முனைவர் இரத்தின வெங்கடேசன் ஐயா (விருதுகள் பல வென்ற சிங்கை தமிழ் ஆசிரியர்), மருத்துவர் பொன் முருகன் ஐயா ஆகியோரும் மாணாக்கருக்கு தமிழின் பெருமையையும் கையெழுத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்தினர்
பொன்மணி்.அபுல் ஹசன் ஐயா,மேனாள் தலைவர்,மஸ்கட் தமிழ்ச்சங்கம்
.
முனைவர்.இரத்தின வேங்கடேசன்,சிங்கப்பூர்
மருத்துவர்.பொன்முருகன்
இந்நிகழ்ச்சியை குளோபல் தமிழ் ஸ்கூலின் நிர்வாகிகள் திருமதி உமா அசோக் மற்றும் திருமதி ராதிகா ஹரீஷ் ஒருங்கிணைத்தனர்..
திருமதி ராதிகா ஹரீஷ்
நிகழ்ச்சியின் சுட்டி பின்வருமாறு:
மேலும் விவரங்களுக்கு
https://www.globaltamilschool.co.uk/
தகவல் மற்றும் செய்தி பகிர்வு:
திருமதி ராதிகா ஹரீஷ்
Comments