ஹீமோகுளோபினை அதிகரிக்க இப்படி பயன்படுத்துங்க!

 முருங்கை இலை, பேரீட்சை… ஹீமோகுளோபினை அதிகரிக்க இப்படி பயன்படுத்துங்க!
ஹீமோகுளோபின் நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை உடலின் திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கும், திசுக்களில் இருந்து கார்பன் டை ஆக்சைடை மீண்டும் நுரையீரலுக்கும் கொண்டு செல்கிறது

உடல் ஆரோக்கியம் மேம்பட சத்தான உணவை உட்கொள்வது அவசியம். உடலில் அனைத்து பாகங்களுக்கும் சீரன இரத்த ஓட்டம் இருந்தாலே நோய் நம்மை அண்டாது. இரத்தத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு என்ற இரு அனுக்கள் உள்ளன. இதில் வெள்ளையனு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. சிவப்பனு உடலின் அனைத்து பாகங்களுக்கு இரத்தத்தை கொண்டு செல்கிறது.  இரத்த சிவப்பனுவில் உள்ள ஹீமோகுளோபின் என்ற இரும்புச்சத்து கொண்ட உடலின் உடல் தசைகளிலிருந்து கார்பன்-டை-ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துச் செல்கிறது.


இந்த ஹீமோகுளோபின் எண்ணிக்கையில் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை குறையும்போது நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து நோய் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த பிரச்சனையை  சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால் ஒரு பெரிய அபாயமா மாறும் குறிப்பாக குறைந்த ஹீமோகுளோபின் (Hb) இரத்த சோகை காரணமாக ஏற்படலாம்.  சில உணவு மாற்றங்களைச் செய்வதன் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும்.


ஹீமோகுளோபின் என்பது அனைத்து சிவப்பு இரத்த அணுக்களிலும் (RBCs) காணப்படும் புரதமாகும். இது செல்கள் அவற்றின் சிறப்பியல்பு சிவப்பு நிறத்தை அளிக்கிறது. ஹீமோகுளோபின் நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை உடலின் திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கும், திசுக்களில் இருந்து கார்பன் டை ஆக்சைடை மீண்டும் நுரையீரலுக்கும் கொண்டு செல்கிறது. இந்நிலையில் ஆயுர்வேத பயிற்சியாளர் டாக்டர் ஐஸ்வர்யா சந்தோஷ் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவும் மூன்று உணவுப்பொருட்களை பரிந்துரைக்கிறார்.


சாதாரண வரம்பு


வயது வந்த ஆண்கள்: 14 முதல் 18 கிராம்/டிஎல்


வயது வந்த பெண்கள்: 12 முதல் 16 கிராம்/டிஎல்


காரணங்கள் என்ன?


மிகவும் பொதுவான காரணம் இரத்த சோகை


மற்ற காரணங்கள் இரத்த இழப்பு, காயம், இரைப்பை புண், இரத்தப்போக்கு குவியல்கள், அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு ஆகியவை அடங்கும்


ஊட்டச்சத்து குறைபாடுகள்


கதிர்வீச்சு, கீமோதெரபி, மருந்துகள் போன்றவற்றால் எலும்பு மஜ்ஜைக்கு சேதம்


சிறுநீரக செயலிழப்பு, எலும்பு மஜ்ஜை கோளாறுகள், இரத்த சோகையின் அறிகுறிகள், பலவீனம் அல்லது சோர்வு, ஆற்றல் பற்றாக்குறை, மயக்கம், மூச்சு திணறல், வேகமான அல்லது ஒழுங்கற்ற இதய துடிப்பு, குளிர்ந்த கைகள் அல்லது கால்கள்


டாக்டர் சந்தோஷின் கருத்துப்படி, உதவக்கூடிய மூன்று எளிய வைத்தியங்கள்


முருங்கை இலைகளை தோரணம்


தேவையான பொருட்கள்


முருங்கை இலைகள் – அரை கப்


நெய் – ½ தேக்கரண்டி –


வெங்காயம் – 3


கல் உப்பு


செய்முறை


நெய்யை சூடாக்கி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் அதன்பிறகு முருங்கை இலைகள் மற்றும் கல் உப்பு சேர்க்கவும், சில நிமிடங்கள்  நன்றாக வதக்கி சாப்பிடலாம்.


திராட்சை-பேரீட்சை பானம்


தேவையான பொருட்கள்


திராட்சை 10 –


பேரீட்சை – 5


செய்முறை


பேரீட்சை மற்றும் திராட்சையை இரவில் ஊற வைக்கவும் எல்லாவற்றையும் பிழிந்து காலையில் இதை குடிக்கவும்


ஏபிசி ஜூஸ்


தேவையான பொருட்கள்


ஆம்லா – ¼ கப்


பீட்ரூட் – கப்


கேரட் – கப் –


தண்ணீர் – 1 கப்


செய்முறை


எல்லாவற்றையும் கலந்து குடிக்கவும்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,