எஸ்.எஸ்.ராஜேந்திரன் - விஜயகுமாரி

 எஸ்.எஸ்.ராஜேந்திரன் - விஜயகுமாரிசிவாஜியைவிடவும் தெள்ளுத் தமிழைத் தீயாய் உச்சரிக்கும் பாங்கு உடையவர் என்று திரையுலகில் பாராட்டைப் பெற்றவர் எஸ்.எஸ்.ஆர். திராவிட இயக்கங்களால் பெண் என்பவளுக்கு அடையாளமாகக் காட்டப்பட்ட கண்ணகிக்கு உருவகம் கொடுத்தவர் விஜயகுமாரி.
‘நாட்டுக்கு ஒரு நல்லவன்’, ‘பூம்புகார்’, ‘தெய்வத்தின் தெய்வம்’, ‘தங்கரத்தினம்’, ‘சாரதா’, ‘சாந்தி’ என்று பல படங்களில் ரசிகர்களுக்குப் பிடித்தமான ஜோடியாகத் திகழ்ந்தது எஸ்.எஸ்.ஆர்.-விஜயகுமாரி ஜோடி.
அப்போது எஸ்.எஸ்.ஆருக்கு பங்கஜம் என்ற மனைவியும், மகன்களும் இருந்தார்கள். ஆனாலும் தொடர்ந்து தனக்கு ஜோடியாக நடித்து வந்த விஜயகுமாரியை தீவிரமாக விரும்பினார் எஸ்.எஸ்.ஆர். எல்லாரும் செய்றதுதான..? நம்ம என்ன தப்பாவா பேசிட்டோம்.. செஞ்சிட்டோம் என்று நினைத்து விஜயகுமாரியுடன் திருமணம் செய்யாமலேயே குடித்தனத்தைத் துவக்கினார் எஸ்.எஸ்.ஆர்.
எல்டாம்ஸ் சாலை வீட்டில் முதல் மாடியில் முதல் மனைவியும், இரண்டாவது மாடியில் விஜயகுமாரியுடனும் குடியும், குடித்தனமுமாக இருந்தார் எஸ்.எஸ்.ஆர்.
எந்த அளவுக்கு நடிப்பையும், அரசியலையும் விரும்பினாரோ அதே அளவுக்கு மதுவையும் விரும்பினார் எஸ்.எஸ்.ஆர். பல தலைவர்களிடம் சொல்லியும், பேசியும் பஞ்சாயத்து செய்தும் பலனளிக்காமல் போக, விஜயகுமாரி தன் மகன் ரவியோடு எஸ்.எஸ்.ஆரிடம் இருந்து விலகிச் செல்ல நேரிட்டது. இன்றுவரையிலும் தொடர்பில்லாமல் தனித்துதான் இருக்கிறார் விஜயகுமாரி.
அவர் விலகிச் சென்ற சிறிது காலத்திலேயே தாமரைச்செல்வி என்ற பெண்ணை மூன்றாவது மனைவியாக்கிக் கொண்டு எல்டாம்ஸ் சாலை வீட்டின் மூன்றாவது மாடியில் குடி வைத்தார் எஸ்.எஸ்.ஆர். இத்தோடு இவரது காதல் முடிந்தது.
இந்த நேரத்தில் ‘நவசக்தி’ பத்திரிகையில் எஸ்.எஸ்.ஆரின் திருமணங்கள் பற்றி கார்ட்டூன் போட்டு கிண்டலடித்திருந்தார்களாம். பத்திரிகையைப் பார்த்த பெருந்தலைவர் காமராஜர் காலையிலேயே தனது வீட்டில் பஞ்சாயத்தைக் கூட்டி அனைவரையும் திட்டித் தீர்த்துவிட்டாராம்..! சம்பந்தப்பட்டவர் எஸ்.எஸ்.ஆரிடம் நேரில் போய் மன்னிப்பு கேட்டுவிட்டு வந்த பின்புதான் காலை சாப்பாட்டில் கை வைத்தார் காமராஜர் என்கிறார்கள் அன்றைய பத்திரிகையாளர்கள். இதெல்லாம் அந்தக் காலம்..!
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,