கதை திருடிய அரிசில் மூர்த்தியை அழைத்து திட்டிய சூர்யா
இந்திய சினிமாவில் புதியதொரு முன்உதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம்.
நடிகர் சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனம் 2டி என்டர்டெயின்மெண்ட். கடைக்குட்டி சிங்கம் போன்ற பெரிய பட்ஜெட் படங்களுடன் சின்ன பட்ஜெட் படங்களையும் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. சமீபத்தில் இவர்கள் அமேசான் பிரைம் வீடியோவுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் 4 படங்கள் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகும் என அறிவித்தனர். முதல் படமாக இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படம் வெளியானது. அரிசில் மூர்த்தி என்பவர் படத்தை எழுதி இயக்கியிருந்தார். படத்தின் கதை சிறப்பாக இருந்தாலும், படமாக்கியவிதத்தில் இருந்த அமெச்சூர்த்தனத்தல் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அத்துடன் படம் கதைத் திருட்டு சர்ச்சையிலும் சிக்கியது.
இந்தப் படம் 2016-ல் வெளிவந்த மராத்தி திரைப்படம் ரங்கா படாங்கா படத்தின் கதையை அப்பட்டமாக தழுவி எடுக்கப்பட்டிருந்தது. இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் வெளியாகி, விமர்சகர்கள் கதைத் திருட்டு விஷயத்தை எழுதிய பிறகே, தான் தயாரித்த படத்தின் கதை மராத்திய படத்திலிருந்து திருடப்பட்டது என்பது சூர்யாவுக்கும், பிறருக்கும் தெரிய வந்துள்ளது. இதனால் கடும் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார் சூர்யா.
Comments