கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் திடீர் மரணம்

 கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் திடீர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி


கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


  1. கன்னட திரை உலகில் பிரபல கதாநாயகனாக இருப்பவர் புனித் ராஜ்குமார். இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். புனித் ராஜ்குமாரை கர்நாடக மக்கள் செல்லமாக ‘அப்பு‘ என்று அழைத்து வருகிறார்கள். பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்த புனித் ராஜ்குமார் புனித் ராஜ்குமார் திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து  நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சிறப்பான சிகிச்சை அளித்து வருவதாகவும்  இப்போது எதுவும் கூற முடியாது, ஐசியுவில் சிகிச்சை தொடர்ந்து வருகிறது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  புனித் ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அவரது மறைவு செய்தி அறிந்த ரசிகர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

நடிகர் புனித் ராஜ்குமாரின் காலமானார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பெங்களூரு நகரில் பாதுகாப்பை அதிகரிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் புனித் ராஜ்குமார் மறைவிற்கு கன்னட திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றன

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்