கவியரசரை நினைவில் கொள்வோம்

 கவியரசரை  நினைவில் கொள்வோம்
அர்த்தமுள்ள இந்து  மதம் " என்னும் நூலை நமக்குத்  தந்தவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். இவர் பெற்றோருக்கு எட்டாவது பிள்ளையாக இருந்தாலும், எட்டாவது வரை படித்திருந்தாலும் இலக்கண இலக்கியங்களை நன்கு கற்றறிந்தவர். எளிய நடை,கருத்தில் தெளிவு,நிதர்சனம்  உண்மை, மொழி ஆளுமை,  அத்தனையையும் ஒருசேர தமிழ் மொழியில், தனிப்பாடல் ஆகவும் திரைப்பட பாடலாகவும் கடந்த 50 ஆண்டு களுக்கு மேலாக நமக்குத் தந்துள்ளார். இவரது பாடல்களை கேட்காத தமிழன் இருக்கமுடியாது. வனவாசம் படித்திருந்தால் இளமைக்காலத்தில்அவர் பட்ட சிரமங்கள் எத்தனையென  தெரியும்.


 கண்ணனுக்காக  அவர் பாடிய கிருஷ்ணகானம் என்றென்றும் நம்  மனதை விட்டு அகலா.புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே கண்ணதாசன் புகழ் பாடுங்களேன். கடைசியாக  கவியரசு கண்ணதாசன் எழுதி, இளையராஜா இசையமைத்த பாடல் கண்ணே கலைமானே  என்பது. கவியரசு கண்ணதாசன் அவர்கள், கடைசியாக அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள தமிழர்களுக்காக சிறப்பு சொற்பொழிவு செய்தார்.


 கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு ஒரு கவிமாலை.  எட்டாவது பிள்ளையாய்  பெற்றோருக்குப் பிறந்து


 எட்டாத உயரம் சென்றார் கவியில் மலர்ந்து 


 அர்த்தமுள்ள இந்து மதமென கட்டுரையினைத்  கந்து அழகுடனே சொன்னார் வைர வரிகளில் ஆராய்ந்து இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தெளிந்து


 எதுகை மோனையுடன் பாடல்களைத் தந்து


 இதயத்தை வருடினார் நல்ல வரிகளுடன் கலந்து


 இவ்வுலகம் போற்றும் என்றென்றும் வியந்து ஞானத்தால் அமைந்த சிந்தனையும் சிறப்பு


 ஞாலத்தில் நிலைத்திருக்கும் இத்தமிழனின் படைப்பு


 பாமரர்களுக்கும்  புரியும் வார்த்தையின் அமைப்பு


 பாடல்களில் தெரியும் தத்துவத்தின் துடிப்பு


 வண்ணமலர்களை ரசிக்க எவருக்கும் ஆசை


 கவியரசு பாடல்களில் வரும் அந்த ஆசை


 என்ன அழகாய் வார்த்தைகளை கோர்த்து


 உன்னதமாய் அமைப்பார் தன்னுள்ளத்தில் பூரித்து


 கண்ணதாசனிடம் போற்றப்பட வேண்டிய கற்பனைவளம்


 கடவுளே கேட்க கிருஷ்ணகானம் தனியிடம்


 உயிரும் மெய்யுடன் உயிர்மெய் எழுத்து


 உயிரோடு என்றும் இருக்கும் இவர் உயர் கரு
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,