இன்று சந்தன வீரப்பனின் நினைவு நாள்

 இன்று சந்தன வீரப்பனின் நினைவு நாள்


தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்தில் சந்தன வீரப்பன் என்றால் தெரியாத நபர்கள் யாரும் இருக்க முடியாது. சந்தன வீரப்பன் தன் கூட்டாளிகளுடன் தமிழ்நாடு மற்றும் கர்நாடக வனப் பகுதியில் முகாமிட்டு, காட்டு யானைகளைக் கொன்று தந்தம் திருடுவது மற்றும் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்துவது உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனால் சந்தன வீரப்பன் மற்றும் கூட்டாளிகளைப் பிடிக்க, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்கள் சிறப்பு அதிரடிப் படை நியமித்து, தீவிரமாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
சந்தன வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள், தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்தில் முக்கிய பிரமுகர்களைக் கடத்தி வைத்து, அரசிடம் பணம் பெறுவது, அரசு பணியவில்லை என்றால் கடத்தப்பட்ட நபரைக் கொலை செய்வது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர். கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கொலை செய்த பின்னர், சந்தன வீரப்பனைப் பிடிக்க இரு மாநில கூட்டு அதிரடிப் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில் கடந்த 2004ம் ஆண்டு இதே அக்டோபர் 18ஆம் தேதி சந்தனக் கடத்தல் வீரப்பன் மற்றும் குழுவினரை அப்போதைய தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படையின் தலைவர் கே.விஜயகுமார் தலைமையில் அதிரடிப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
அக்.18 ஆன இன்று, வீரப்பன் நினைவு தினம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,