தூக்கம்… நோய் எதிர்ப்பு மண்டலம்… என்ன தொடர்

 தூக்கம்… நோய் எதிர்ப்பு மண்டலம்… என்ன தொடர்பு? ஆய்வுகள் சொல்வது என்ன? 



நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பல்வேறு விதத்தில் பலப்படுத்தலாம். அவற்றில் முக்கியமானது நல்ல தூக்கம். ஏதோ ஒரு நாள், இரண்டு நாட்கள் நன்றாக தூங்கினால் போதாது. தூக்கத்தை சார்ந்த விஷயங்களில் ஒழுங்குமுறையை கடைபிடிக்க வேண்டும். நல்ல தூக்கம், நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு மிகவும் ஏற்றது. நன்றாக தூங்கினால் தான் அடுத்த நாள் காலையில் புத்துணர்ச்சியோடு எழ முடியும். அது மட்டுமின்றி, தூக்கம் உங்கள் வாழ்க்கைமுறை சார்ந்த பிரச்சனைகளான உடல் பருமன், உடல் வலி, தசை வலி போன்றவற்றை சரி செய்கிறது. நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் உட்பட பல்வேறு முக்கிய உடல் ரீதியான செயல்முறைகளுக்கு உதவியாக இருக்கிறது.


நோய் எதிர்ப்பு மண்டலம்தான் நம்மை தொற்றுகளில் இருந்தும், நுண்கிருமிகளின் தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கிறது என்று பரவலாக நம்பப்படுகிறது. இந்த நோய் எதிர்ப்பு அமைப்பு, நாம் உண்ணும் உணவு மற்றும் நம்முடைய வாழ்க்கை முறையை மட்டும் சார்ந்து செயல்படுவதில்லை. நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கியமானது, தூக்கம். நல்ல தூக்கம், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. அதனால்தான், கொரோனா தொற்று பாதிப்பு உட்பட, எந்த நோயாலும் பாதிப்பு அடைந்தவர்களுக்கு நல்ல உணவும், போதிய ஓய்வும், ஆழமான தூக்கமும் தேவை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவரும், குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.


நோய் எதிர்ப்பு சக்திக்கும் தூக்கத்துக்கும் உள்ள தொடர்பு:


தூங்குவதால்நோய் எதிர்ப்பு சக்திஅதிகரிக்கிறது. எப்படி என்ற கேள்விக்கான பதில் இங்கே. போதுமான அளவு தூங்கினால், உடலில் சைடோகின்ஸ் மற்றும் T-செல்ஸ் உற்பத்தியாகும். சைடோகின்ஸ் என்பது அழற்சி-எதிர்ப்பு புரதம். T-செல்ஸ் என்பது நம் உடலின் போர் வீரர்கள். இவை உடலில் உள்ள ஆண்டிஜென்களோடு போரிட்டு, உடலை பாதுகாக்கிறது. தூக்கத்தால் கிடைக்கும் நன்மைகளை உடல் பெற வேண்டுமானால், என்ன மன நிலையாக இருந்தாலும், அதை ஒதுக்கி விட்டு, தூக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உங்களின் தாங்கும் திறனை எப்படி பலப்படுத்துவது மற்றும் அசௌகரியமான சூழ்நிலை இருந்தாலும் எப்படி தூங்குவதைப் போன்றவற்றை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். எனவே, சரியான தூக்கத்திற்கான பழக்க வழக்கங்கள், உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும், உங்களுக்கு தேவையான தூக்கத்தை வழங்கவும் அவசியம். அதற்கான வழிமுறைகள் இங்கே…


நீங்கள் தூங்கும் அறை எப்படி இருக்கிறது:சீரான, ஆழ்ந்த மற்றும் நிம்மதியான தூக்கத்தை வழங்குவதில், நீங்கள் தூங்கும் அறை அல்லது உங்கள் சுற்றுப்புறங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. நீங்கள் உறங்கும் அறை இனிமையாகவும் குளிராகவும் இருக்கிறதா என்பதை நீங்கள் எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அறை, வெளிச்சமாக அல்லது சுற்றுப்புறம் அமைதியாக இல்லாததாக நீங்கள் உணர்ந்தால், நீங்கள் ஸ்லீப் மாஸ்க் அணியலாம். அல்லது திரைசீலைகள் பயன்படுத்தி வெளிச்சத்தை குறைக்கலாம். உங்கள் அறை இருட்டாகவும், குளிர்ச்சியாகவும், அமைதியாகவும் செய்தால், அது தானாகவே நீண்ட நேர தூக்கத்துக்கு வழிவகுக்கும்.


தூங்கும் முன்பு குளித்தல்:குளியல் என்பது காலை நேரத்தில் உடலை சுத்திகரிக்க மட்டும் அல்ல. இரவு நேரத்தில் குளிப்பது உங்களுக்கு பல விதங்களில் பயனளிக்கும். முக்கியமாக, நீங்கள் நன்றாக உறங்க, குளிப்பது உதவி செய்கிறது. உறங்கச் செல்லும் முன் குளிப்பது உங்கள் உடலின் வெப்பநிலையைக் குறைத்து, உங்களை அமைதிபடுத்தும். அது மட்டுமின்றி, உடல் முழுவதும் ஆக்சிஜன் மற்றும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, உங்கள் தசைகள் மற்றும் மூட்டுகளை இலகுவாக்கும். குளித்த பின்னர் மிகவும் அமைதியாக உணர்வீர்கள். எனவே, நீங்கள் தூங்கும் நேரத்துக்கு முன்பு, குளிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தூக்கமில்லாமல் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நபர்களுக்கு படுக்கைக்கு செல்வதற்கு முன் குளியல் அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.


நீல நிற வெளிச்சம்:நீல நிற வெளிச்சம் என்பது இரவு விளக்கைக் குறிப்பது அல்ல. பெரும்பாலான, எலக்ட்ரானிக் சாதனங்களான டிவி, மொபைல், கணினி, டேப்லேட், என்று அனைத்துமே நீல நிற ஒளியை வெளிப்படுத்துகின்றன. இந்த நிறம், தூக்கத்திற்காக இயற்கையாக சுரக்கும் மெலடோனின் என்ற ஹார்மோனை தடுக்கிறது. மேலும், இரவு விளக்கு மற்றும் LED விளக்குகளையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள். அவையும், இரவில் உறுத்தலான நிறங்களை வெளிபடுத்தி தூக்கத்தைக் கெடுக்கலாம். உங்கள் எலக்ட்ரானிக் சாதனங்களை ‘நைட் மோடு’ எனப்படும் இரவுப் பயன்முறைக்கு மாற்றுங்கள். இது நீல நிற ஒளி உமிழ்வை வெகுவாகக் குறைக்கும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,