சத்யராஜ்.

 1954 ஆம் ஆண்டு கோவையில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த ரங்கராஜ்தான் பிற்காலத்தில் சினிமாவில் சத்யராஜாக பிரபலமானார். ஆரம்பகாலத்தில் நாடகக் குழுக்களில் வாய்ப்பு கிடைத்ததன் மூலம், சிறுசிறு வேடங்களில் நடித்தார். அதன் பின்னர், சில திரைப்படங்களில் புரொடக்‌ஷன் வேலையையும் பார்த்துக்கொண்டே தீவிரமாக வாய்ப்பு தேடத்தொடங்கினார். கமல் நடித்த சட்டம் என் கையில் திரைப்படத்தின் மூலம், திரையுலகில் நடிகராக அடியெடுத்து வைத்தார் சத்யராஜ். இயக்குநர் மணிவண்ணனின் நூறாவது நாள் படத்தில் மொட்டைத்தலை வில்லனாக நடித்து பிரபலமானார் சத்யராஜ். அதைத் தொடர்ந்து அவருக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன.




ஒரே ஆண்டில் 20 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார். 1980 களில் தினமும் 3 படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கும் அளவிற்கு பிஸியான நடிகரானார் சத்யராஜ். கமலின் காக்கிச்சட்டை படத்தில் வில்லனாக நடித்ததற்குப் பின் மேலும் பிரபலமானார். தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்று விட்ட சத்யராஜுக்கு பாரதிராஜாவின் முதல் மரியாதை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்தப் படத்தில் சத்யராஜின் நடிப்பை பார்த்த பாரதிராஜா, தனது அடுத்த படமான கடலோரக் கவிதைகள் படத்தில், கதாநாயகனாக்கினார். வேதம் புதிது படத்தில் பாலுத்தேவராக வாழ்ந்து காட்டினார், சத்யராஜ். பாரதிராஜாவின் மிகச்சிறந்த திரைப்படங்களுள் ஒன்றான வேதம் புதிது படம் சத்யராஜை குணசித்திர நடிகராகவும் அடையாளம் காட்டியது.
இத்திரைப்படத்திற்காக பல விருதுகளும் கிடைத்தது. ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ள சத்யராஜ் கதாநாயகனாக தனித்து நடித்தும் வெள்ளிவிழாப் படங்களை கொடுத்திருக்கிறார். 1994 ல் வெளியான அமைதிப்படை திரைப்படத்தில் சத்யராஜின் நடிப்பு மிகுந்த பாராட்டைப் பெற்றது. இதேபோல், பெரியாரின் கொள்கைகளை பின்பற்றிவந்த சத்யராஜ், 2007 ஆம் ஆண்டு வெளியான பெரியாரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் பெரியாராகவே வாழ்ந்து காட்டினார்.
காமெடி ஜாம்பாவான் கவுண்டமணியுடன் சத்யராஜ் இணைந்து நடித்த படங்கள் ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்கைவைத்தது. சுமார் 40 ஆண்டுகளாக திரையுலகில் வில்லனாக கதாநாயகனாக குணச்சித்திர நடிகராக தனிமுத்திரை பதித்துவரும் சத்யராஜ் இன்றைய இளம் கதாநாயகர்களின் படங்களிலும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி காலத்திற்கேற்ற நடிகர் என்பதை நிரூபிக்கிறார்.
ஷாருக்கானுடன் சென்னை எக்ஸ்பிரஸ், ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி என பிறமொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பிலிம்பேர் விருது, தமிழக அரசின் எம்.ஜி.ஆர். விருது, பெரியார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார் சத்யராஜ்
நன்றி: தினத்தந்தி


4

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,