கொடி காத்த திருப்பூர் குமரன்
கொடி காத்த திருப்பூர் குமரன் பிறந்த நாளான இன்று இத் திருமகனை நினைவில் கொள்வோம்.
தேசப்பற்று பெரிதென்றாய்
தேசியமே பெரிதென்றாய்
தேசியக்கொடி உயிரென்றாய்
நம் தேசத்திற்கு உடலென்றாய்
இருபத்தேழு ஆண்டுகள், மூன்று மாதங்கள் ஏழு நாட்களே இம்மண்ணில் வாழ்ந்த ஒரு தவப்புதல்வன்
குமாரசாமி என்கின்ற கொடிகாத்த குமரன் குறித்தான பதிவு.
ஈரோடு சென்னிமலை அருகே உள்ள செ. மேலப்பாளையம் என்ன ஊரில் நாச்சிமுத்து கருப்பாயி தம்பதிகளுக்கு மகனாக
1904 அக்டோபர் மாதம் நான்காம் நாள் பிறந்தவர், இவரது இயற்பெயர் குமாரசாமி.
கைத்தறி நெசவுத் தொழிலை செய்தது இவரது குடும்பம்.
இவர் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார் குடும்பத்திற்கு
போதிய வருமானம் நெசவுத்தொழிலில் கிடைக்காததால், திருப்பூருக்கு மில்லில் வேலை பார்க்கும் பணியை செய்தார் குமாரசாமி அவர்கள்.
கதர் இயக்கம் இங்கு சிறப்பாக நடந்து வந்தது. ஒரு முறை திருப்பூருக்கு வந்த காந்தி அவர்களின் பேச்சைக் கேட்ட, குமாரசாமி அவர்கள், காந்திஜி அவர்களின் கொள்கையில் மிகவும் தீவிரம் காட்டினார்.
ஆங்கிலேயர் எதிராக போராட்டம் நடத்த ஆரம்பித்தனர்.
இதன் காரணமாக திருப்பூரில் வாழ்ந்த பி.எஸ். சுந்தரம் அவர்கள், தேசபந்து வாலிபர் சங்கத்தை துவக்கினார்.அதில் பி.எஸ். சுந்தரம் அவர்களுடன் சேர்த்து மொத்தம் பத்து பேரு உறுப்பினர் ஆனார்கள்.
குமாரசாமி என்கின்ற குமரன். இராமன் நாயர், விசுவநாத நாயகர், சுப்பராயன், நாச்சிமுத்து செட்டியார், அப்புகுட்டி, பூங்காளி, நாராயணன் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் உள்ளிட்ட ஒன்பது உறுப்பினர்கள்.
வெள்ளையனை எதிர்த்து, சத்யாகிரகம் போராட்டம் நடத்தியதன் பெயரில், மகாத்மா காந்தி அவர்கள் 1932 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான்காம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனால் இந்தியா முழுவதும் அன்றைய மக்கள் ஆங்கிலேயரின் அராஜக கொடுமை கண்டு கொதித்து எழுந்தனர்.
1932 ஆம் ஆண்டு ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி இரவு தேசபந்து வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த பத்து நபர்களும் கூடினர். அச் சங்கத்தின் வழி நடத்தும், திரு பி. எஸ். சுந்தரம் அவர்கள், ஆங்கிலேயரின் அராஜக செயலுக்கு நாளை போராட்டம் நடத்த உள்ளதாகவும், இந்தப் போராட்டத்தில் அச்சம் கொள்பவர்கள் விலகிக் கொள்ளலாம் என்றும். போராட்டத்தில் நம் உயிர் போனாலும் போகும் என்றும் சங்கத்தின் சார்பாக வீர வசனம் பேசினார்.
அப்போராட்டத்தில் எல்லோரும் கலந்து கொள்வது என முடிவெடுத்தனர்.
மறுநாள் காலை திருப்பூரின் மையப்பகுதியில் வெள்ளையனுக்கு எதிராக அத்தனை பேரும் கோஷமிட்டனர். வந்தே மாதரம் ----
வந்தே மாதரம் என்று
அங்கு நின்றிருந்த காவலர்கள், 10 பேர் அடங்கிய சங்கத்தின், உறுப்பினர்களி டம் வந்தே மாதரம், என உரைப்பதை நிறுத்து மாறும், கொடி ஏந்துவதை தவிர்க்கவும் எல்லோரும் கலைந்து செல்லுமாறும் எச்சரித்தனர்.
ஆனால் யாரும், போவதாக இல்லை. வந்தே மாதரம் என்று சொல்லிக் கொண்டே இருந்தனர். அங்கிருந்த காவலர்கள் தடியடி பிரயோகம் நடத்தினர். குமரன் தான் இந்திய கொடியை, விடுவதாக இல்லை. வந்தே மாதரம் என்று சொல்லும்போதே. ஒரு காவலர். அவரை தலையில் அடித்தார். அங்கிருந்து எல்லோரையும் காவலர்கள் அடித்தனர். குமரனின் தலை மண்டையில் உதிரம் சொட்டிக்கொண்டே இருந்தது, இருப்பினும் அவர் தேசியக் கொடியின் தேசியக் கொடியை மேலே நிமிர்த்திப் பிடித்தார்.
காவலர்களின் அடி தாங்க முடியாமல், அனைவரும் மயங்கி விழுந்தனர். திருப்பூர் குமரனுக்கு பலத்த காயம் உதிரம் பூமியில் சொட்டிக்கொண்டே இருந்தது. போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பிஎஸ் சுந்தரம் அவர்களுக்கு 16 இடத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்றும் பலருக்கு பலத்த காயம்.
இருப்பினும் திருப்பூர் குமரன். கொடியை விடுவதாக இல்லை.
மயக்க நிலையிலேயே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மறுநாள் ஜனவரி 11ஆம் நாள் நாட்டுக்காக தன் உயிரையே கொடுத்து. "கொடிகாத்த குமரன்''
என்று பாரதம் சொல்லும் அளவுக்கு
தன்னையே தியாகம் செய்து உத்தமனானார்.
கொடிகாத்த குமரன் மறைந்த ஒரு மாதத்திற்கு பின். மகாத்மா காந்தி அவர்கள் கர்மவீரர் காமராஜர் உடன் திருப்பூருக்கு வந்து. அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.
தோன்றின் புகழோடு தோன்றுக என தெய்வப் புலவரின் திருக்குறளின்படி வாழ்ந்தவரே "திருப்பூர் கொடிகாத்த குமரன்''.
முருக. சண்முகம்
சென்னை 56
Comments