#குடும்பம்_ஒரு_கதம்பம் தொடர்(3) /உடற்பயிற்சி
செல்வி, இன்னிக்கு நாள் பூரா என்ன வேலை செஞ்சே.?
இவர் ஆபிஸ்ல இருந்து வந்ததும் கேட்டார்.
சமைச்சேனே..
அதான் நான் ஆபீஸ் போறதுக்கு முன்னாலயே முடிச்சிடுறியே.
ஆமால்ல. !!
நீங்க ஆபீஸ் போனப்பறம் லஷ்மி வந்துச்சி.
லஷ்மி வந்து அவங்க வேலைய செய்றாங்க, நீ என்ன செஞ்சே?
நான் வந்து..பாகுவுக்கு ஃபுட் வச்சேன்.
அப்பறம்..
காய்ஞ்ச துணிய எல்லாம் எடுத்து வச்சேன்.
அப்புறம்..
எலெக்ட்ரிஷியன் வந்து switch board ல என்ன பிரச்னைனு பார்த்துட்டு போனாங்க.
ம்ம்ம் அப்பறம் நீ என்ன செஞ்சேன்னு கேட்டுட்டு இருக்கேன்.
அப்பறம்..வந்து..நானா..?
உடற்பயிற்சி செஞ்சியா?
ஆங்..ஆமாம் செஞ்சேன்.
நெஜம்மா?
நெஜம்ம்ம்மா!!
எத்தன நிமிஷம் செஞ்சே?
எனக்கு கை கால் வலிக்கிற
வரைக்கும் செஞ்சேங்க.!!
ஓ..ஓக்கே..அப்ப எத்தன செகண்ட்ஸ் செஞ்சே?
Comments