தனிமை.../கவிதை /அனிதா சந்திரசேகர்


தனிமை.. ஒரு தனிமை...

உனக்கும் எனக்குமான தூரத்தை

மௌனத்தால் நிரப்பிக் கொண்டிருக்கிறது...


ஒரு தனிமை...

அனிச்சையாய் நுழையும் உன் தீரா நினைவுகளால்

உலகை மறந்த நிலையில் உவகை கொண்டிருந்தது...


ஒரு தனிமை...

ஏதோ பிரம்மை கவ்விக் கொள்ள

மழை ஒய்ந்த மௌனத்தில் சொட்டும் துளிகளாய் தனித்து புலம்புகிறது ...


ஒரு தனிமை...

நினைவுகள் நிரம்பி வழியும் உயிர்ப் பேழையிலிருந்து காற்றாய் மிதந்து வந்து நீ மட்டுமே என் வாழ்தலின் தேவையாய் என்னை இயங்க வைக்கிறது...


ஒரு தனிமை...

சில நியாபக இழைகள் 

மனச்சுவரில் முட்டிமோதி

தொலைதலும் மீளுதலுமாய் நீளும் நிசப்தம் பனிப்பாறையாய் இறுகிக் கிடக்கிறது...


காலத்தால் சபிக்கப்பட்ட நீயற்ற இந்த வெறுமை நிறைந்த தனிமை என்னை மிடறு மிடறாய் விழுங்கிக் கொண்டிருக்கிறது நாளும் பொழுதும் ....


- அனிதா சந்திரசேகர்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,