வில்லனாக மிரட்டிய சிவாஜி
வில்லனாக மிரட்டிய சிவாஜியின் 4 படங்கள்.. இவர் நடிக்காத கதாபாத்திரமே இல்லை.!
ஒரு நடிகனாக தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை கொண்டவர்தான் சிவாஜி கணேசன். ஹீரோவை தாண்டி வில்லனாகவும் வெற்றிகண்ட சிவாஜி கணேசனின் படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம்.
திரும்பிப்பார்: 1953 ஆம் ஆண்டு மு கருணாநிதி வசனத்தில் டிஆர் சுந்தரம் இயக்கத்தில் திரும்பிப்பார் திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி. வி. நரசிம்ம பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பரந்தாமன் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
துளி விஷம்: 1954 ஆம் ஆண்டு வெளிவந்த துளி விஷம் திரைப்படத்தை ஏ.எஸ்.ஏ சாமி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே ஆர் ராமசாமி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் கா.ந தண்டாயுதபாணி பிள்ளை. இப்படத்தில் சூரியகாந்தன் ஆக சிவாஜி நடித்திருந்தார்.
அந்த நாள்: 1954 ஆம் ஆண்டு சுந்தரம் பாலச்சந்தர் இயக்கத்தில் அந்த நாள் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரிபாய், ஜாவர் சீதாராமன், டி கே பாலச்சந்திரன் என பலரும் நடித்து இருந்தார்கள். இப்படம் தமிழில் பாடல்கள் இல்லாமல் வந்த முதல் படம். இத்திரைப்படத்தில் சிவாஜி ராஜன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ரங்கோன் ராதா: 1956 வெளிவந்த கா. நா அண்ணாதுரை எழுதப்பட்ட புதினத்தை படமாக எடுக்கப்பட்டது ரங்கோன் ராதா. இப்படம் மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பில் மு கருணாநிதி கதையில் உருவானது. இப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ் எஸ் ஆர் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு டி ஆர் பாப்பா இசையமைத்திருந்தார்.
நன்றி: சினிமா பேட்டை
Comments