விட்டுக் கொடுத்து வாழத் தெரிந்தவர்களுக்கு

 விட்டுக் கொடுத்து வாழத் தெரிந்தவர்களுக்கு





வாழ்க்கை,
வெற்றியை கொண்டு வந்து தருகிறது.
குடும்பத்தில், நட்பில், தொழிலில்...
அத்தனை இடங்களிலும் அவசியம் தேவைப்படுவது இந்த விட்டுக் கொடுத்துப் போவது.
இதை சொல்லும்போது
கே.பாக்யராஜ் பற்றிய ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
‘ஒரு கைதியின் டைரி’.
இது கமல் நடித்து,
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மாபெரும் வெற்றிப் படம்.
கதை எழுதியவர் கே.பாக்யராஜ் .
இந்தப் படத்தை 'ஆக்ரி ரஸ்தா' என்ற பெயரில் ஹிந்தியில் எடுக்க, அமிதாப் நடிக்க, பாக்யராஜே இயக்கும் வாய்ப்பு வந்தது.
க்ளைமாக்ஸ் காட்சி.
பாக்யராஜ் இதை அமிதாப்பச்சனுக்கு விளக்கிச் சொல்ல, "நோ" சொன்னார் அமிதாப் .
ஏனெனில் ஏற்கனவே தமிழில் வெளியான கிளைமாக்ஸை மாற்றி, வேறு விதமாக எடுக்க விரும்பினார் பாக்யராஜ்.
ஆனால் அமிதாப்பும், தயாரிப்பாளரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
'ஒரு கைதியின் டைரி ’ தமிழ் கிளைமாக்ஸில்,
வீரசிவாஜி சிலை வேடத்தில் வந்து, பொது மக்கள் முன்னிலையில் பப்ளிக்காக வில்லனைக் கொல்லுவார் கமல்.
ஆனால் அது பாக்யராஜ் எழுதிய ஒரிஜினல் க்ளைமாக்ஸ் இல்லை.
பாதாள சாக்கடையில் ஒளிந்து வந்து, எதிர்பாராமல் சீறி எழுந்து வில்லனை கொல்வதுதான், பாக்கியராஜ் எழுதி வைத்திருந்த ஒரிஜினல் க்ளைமாக்ஸ்.
ஆனால் 'ஒரு கைதியின் டைரி' படப்பிடிப்பின்போது
கமலுக்கும் பாரதிராஜாவுக்கும் இடையே, ஏதோ கருத்து வேறுபாடு வர, பாக்யராஜ் எழுதியிருந்த கிளைமாக்ஸை மாற்றி, படத்தை எடுத்து முடித்து விட்டாராம் பாரதிராஜா.
இப்போது ஹிந்தியில்,
பாக்கியராஜே இயக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, தன் சொந்த க்ளைமாக்ஸை படம் பிடிக்க ஆசைப்பட்டார் பாக்யராஜ்.
ஆனால் அமிதாப் ஆழ்ந்து யோசித்து விட்டு, "தமிழில் வந்து மிகப் பெரிய வெற்றி பெற்ற அந்த சிவாஜி சிலை க்ளைமாக்ஸ் நன்றாகத்தானே இருக்கிறது. சக்ஸஸ் வேறு ஆகி விட்டது. தேவை இல்லாமல் ஏன் அதை மாற்ற வேண்டும்” என கேட்க ...
“அதை விட இது நல்லா வரும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு ஸார் ” என்று பாக்யராஜ் தன்னம்பிக்கையுடன் அழுத்தமாக சொல்ல ...
தயாரிப்பாளர் ஆழ்ந்து யோசித்தார்.
இயக்குனரும் தயாரிப்பாளரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துப் போனால் மட்டுமே, ஒரு படம் உருப்படியாக உருவாகும்.
எதுவும் பேசாமல் பாக்யராஜ் கேட்ட பாதாள சாக்கடை செட்டை, பத்து லட்சம் செலவில் போட்டு விட்டார் தயாரிப்பாளர்.
அதன் பின் மெல்ல பாக்யராஜிடம் வந்த தயாரிப்பாளர், “இங்கே பாருங்க பாக்யராஜ் சார். செலவை குறைப்பதற்காக நான் செட்டை போடாமல் இருக்கிறேன் என்று நீங்கள் தவறாக நினைத்து விடக் கூடாது. அதனால்தான் இந்த செட்டை போட்டிருக்கிறேன்.
ஆனால் இப்போதும் சொல்கிறேன். தமிழில் வந்த க்ளைமாக்ஸ் சூப்பர். அதை மாற்ற வேண்டாம். அப்படியே எடுத்து விடுங்கள்” என்று சொல்ல,
தர்மசங்கடமானார் பாக்யராஜ்.
பிடிவாதம் பிடிப்பதால் பிரச்சினைகள் ஒருபோதும் தீர்வதில்லை.
இந்த இடத்தில் பாக்கியராஜ் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போக விரும்பினார்.
”ஒண்ணு பண்றேன். நீங்க போட்ட செட்டில் என்னோட க்ளைமாக்சை எடுத்துக்கிறேன். அப்புறம் நீங்களும் அமிதாப்பும் சொல்றமாதிரி தமிழ் பட க்ளைமாக்ஸ்சும் தனியா எடுத்துக்கறேன்.
எது நல்லா இருக்குதோ, அதை வச்சுக்குவோம் ”என்றார்.
பாக்யராஜின் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் அப்ரோச், அமிதாப்பையே கொஞ்சம் ஆச்சரியப்பட வைத்தது.
பாக்யராஜ் சொன்னபடியே பாதாள சாக்கடையில் குதித்து விட்டார் அமிதாப்.
கிளைமாக்ஸ்சை, தான் நினைத்தபடி எடுத்து முடித்தார் பாக்யராஜ்.
அனைவரும் அசந்து போனார்கள் அமிதாப் உட்பட !
அப்புறம் என்ன ?
'ஆக்ரி ரஸ்தா' தமிழை விட ஹிந்தியில் பிரமாதமாக ஓடியது.
அந்த வெற்றிக்கு காரணம்
சந்தேகமில்லாமல்,
தயாரிப்பாளரும் பாக்யராஜும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து போனதால்தான்.
ஆம். விட்டுக்கொடுத்து வாழ தெரிந்து கொண்டால், வெற்றியும் நிம்மதியும் விரும்பி நம்மைத் தேடி வரும்.
John Durai Asir Chelliah

Like
Comment
Share

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,