பணத்திற்காக அல்ல, புகழுக்காக…!” ஆப்ரகாம் லிங்கன் சொன்ன விளக்கம்

 பணத்திற்காக அல்ல, புகழுக்காக…!”

ஆப்ரகாம் லிங்கன் சொன்ன விளக்கம்

“பணத்திற்காக அல்ல, புகழுக்காக…!”
ஆப்ரகாம் லிங்கன் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு…
வழக்கறிஞராக வேலை பார்த்த ஆப்ரகாம் லிங்கன், தனது கட்சிக்காரர்களிடம் “இவ்வளவு கொடுங்கள்…” என கேட்க மாட்டார்; கொடுத்ததை வாங்கிக் கொள்வார்.
இதை பார்த்த அவர் மனைவி, “நீங்கள், எதற்காக வக்கீல் தொழில் செய்கிறீர்கள்…” என்று கேட்டார்.
“புகழுக்காக… அந்தப் புகழால் கிடைக்கும் மன அமைதிக்காக…” என்றார் லிங்கன்.
“வெறும் புகழ் மட்டும், மனிதனுடைய வயிற்றை நிரப்பி விடாதே. வாழத் தெரியாத வக்கீலாக உள்ளீரே…” என்றார் அவரது மனைவி.
“இந்த ஒரு சாண் வயிறு நிரம்புவதை பற்றியா நான் அதிகம் கவலைப்பட வேண்டும். எந்த மிருகமும், பறவையும் கவலைப்படாத ஒரு விஷயத்தைப் பற்றி, மனிதன் ஏன் மூளையை குழப்பிக் கொள்ள வேண்டும்…” என்றார் லிங்கன் அமைதியாக.
இந்த சமாதானம், அவர் மனைவியை திருப்திபடுத்தவில்லை. “மற்ற வக்கீல்கள் நிறைய சம்பாதிக்கின்றனர்; வசதிகளைப் பெருக்கிக் கொள்கின்றனர். நீங்கள் இதற்கு மாறாக நடப்பதில் என்ன லாபம்…” எனக் கேட்டார் அவரிடம்.
“லாபம் சம்பாதிக்க மூளை தேவையில்லையே. ஒரே ஒரு கைத் துப்பாக்கியை வைத்து ஊரை மிரட்டினால் கூட பணம் குவிந்து விடும். நானும் அப்படி மாற வேண்டுமா?” என்று கேட்டதும், அவர் மனைவியிடமிருந்து பதில் இல்லை.
ஆண்டுகள் பல கடந்து உழைப்பால், முயற்சியால், அமெரிக்க ஜனாதிபதியானார் ஆப்ரகாம் லிங்கன்.
ஒருநாள், அவர் மனைவி “ஒரு காலத்தில் உங்களை பணம் சம்பாதிக்கும்படி வற்புறுத்தினேன். இப்போது தான் அந்த உண்மை எனக்கு புரிகிறது…” என்றார்.
“அது என்ன…” எனக் கேட்டார் லிங்கன்.
“பணம் சம்பாதித்த, வக்கீல்கள் யாரும், ஜனாதிபதியாக வரவில்லை. புகழ் தேடிய தாங்கள் ஜனாதிபதியாகி விட்டீர்…” என்றார்.
– நன்றி: முகநூல் பதிவு
நன்றி: தாய்

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்