Smartphone-ஐ சார்ஜ் போடுவதற்கு முன் செய்ய வேண்டியது என்ன?

 

Smartphone-ஐ சார்ஜ் போடுவதற்கு முன் செய்ய வேண்டியது என்ன? 




ஸ்மார்ட்போனை சார்ஜ் போடும் போது வெடித்துவிட்டதாக பல செய்திகளில் நாம் படித்திருப்போம். அதற்கு முக்கிய காரணம் நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் தான்.

செல்போனை சார்ஜில் போடுவதற்கு முன்னர் சில விடயங்களை சரிபார்க்க வேண்டும்.

பொதுவாக இன்று நாம் அனைவரும் போன் உடைந்துவிடாமல் இருக்க போனிற்கு கவர் உபயோகிக்கிறோம். தொலைபேசியை சார்ஜில் போடும்போது கவரை கழட்டிவிட்டு போடுவது மிகவும் சிறந்தது. ஏனெனில் சார்ஜ் போடும்போது தொலைபேசி சூடாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

அதே போன்று சார்ஜ் போடும்போது மொபைல் டேட்டாவை ஆப் செய்து வையுங்கள். மேலும் ஏதேனும் ஆப் திறந்த நிலையில் இருந்தால் அவற்றை மூடிவிட்டு சார்ஜ் செய்வது மிகவும் நல்லது. இல்லையெனில் உங்கள் சார்ஜ் வீணாக வெளியேறும்.

தூங்கும் போது இரவு முழுவதும் தொலைபேசியை சார்ஜ் போடுவது. இவ்வாறு செய்யும்போது உங்கள் போன் சூடாகி வெடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அதே போல அதிக நேரம் போன் பிளக் பாயிண்டில் இருந்தால் பேட்டரியின் தரம் போய் மொபைலின் ஆயுள் குறைந்துவிடும்

15 சதவீதம் இருக்கும்போது போனை சார்ஜ் போடுவது நல்லது. போன் ஸ்விட்ச் ஆஃப் ஆன பிறகு சார்ஜ் போட வேண்டாம். அதற்காக சிறிது நேரம் சார்ஜ் போட்டு விட்டு எடுத்து விடலாம் என்று 20 அல்லது 30 சதவீத சார்ஜ் ஆனவுடனே எடுக்க வேண்டாம். குறைந்தது 80 சதவீதமாவது இருக்கும் போது சார்ஜ் எடுத்து விடுங்கள்.

ஸ்மார்ட் போன்களை சார்ஜ் செய்யும்போது அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.  

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்