உலக எலும்புப்புரை தினம் (World Osteoporosis Day)
உலக எலும்புப்புரை தினம் (World Osteoporosis Day)
மாதவிடாய் நிற்றலுக்குப் பிறகு எலும்புப்புரை நோய் பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. எலும்புப்புரை என்பது அதிகமாக எலும்பு முறிவு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு எலும்பு சம்பந்தப்பட்ட நோய். உலக எலும்புப்புரை அமைப்பு 1996ஆம் ஆண்டில் அக்டோபர் 20 ஐ உலக எலும்புப்புரை தினமாக அறிவித்தது. உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
பொதுவாக நாற்பது வயதிற்கு மேல்தான் முதுகு வலி, கழுத்து வலி போன்றவை ஏற்படும். இதற்கு காரணம் எலும்பு தேய்மானம் என் சொல்வார்கள். நாம் அனைவரும் அறிந்தது போலே எலும்புக்கு வலு சேர்ப்பது கால்சியம் என்னும் தாதுச்சத்து தான். உடலில் கால்சியம் அளவு குறையும் போது, எலும்புகள் வலுவிழந்து தேய்மானம் ஏற்படும். கால்சியம் எலும்புகளை பலப்படுத்தும் என்று பெரும்பாலான மக்கள் அறிவர்.
இதனிடையே எலும்பு திசு குறைவதால் ஏற்படும், ஆஸ்டியோபோரோசிஸ்(எலும்புப் புரை) நோயால் எலும்பு பலவீனமடைகிறது. எலும்பு முறிவு ஏற்படும் வரை நோய் வெளியே தெரியாது. சர்வதேச அளவில், மூன்று பெண்களில் ஒருவர், ஐந்து ஆண்களில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வயதானவர்களை இந்த நோய் எளிதில் தாக்கும். கால்சியம், வைட்டமின் "டி' குறைபாடு,உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை, புகைபிடித்தல், அளவுக்கு அதிகமான மது, காபின் உட்கொள்ளுதல் உள்ளிட்டவை நோய் தாக்குதலுக்கு முக்கிய காரணம்
Comments