சிறந்த 10 மூலிகை மருந்துகள் -

 சிறந்த 10 மூலிகை மருந்துகள் - 



நுரையீரல் சளி, ஜலதோஷம், வறட்டு இருமல் 



நுரையீரல் சளி


ஆடுதொடா இலை


நுரையீரலில் ஏற்படும் சளித் தொல்லை நீங்க ஆடாதொடா இலை, வெற்றிலை, துளசி, தூதுவளை எடுத்து லேசாக அரைத்த பின் வேகவைத்து தேன் கலந்து சாப்பிட்டு வர குணமாகும். 


தொண்டை, நுரையிரல்/சளி, இருமல்


வெங்காயத்தோல்


வெங்காயத்தாளை அரைத்துதிப்பிலி கலந்துபொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல் குறையும். 


நுரையீரல் சளி


இஞ்சி


நுரையீரலில் சளி குறைய இஞ்சி, வெள்ளெருக்கம்பூ, மிளகு ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வருதல் நலம் தரும் 


நுரையீரல் சளி/ஜலதோஷம்


உத்தாமணி இலை


உத்தாமணி இலைச்சாறு, தூதுவளைச் சாறு, துளசிச் சாறு, கற்பூரவள்ளிச்சாறு வெற்றிலைச்சாறு இவற்றை கொதிக்க வைத்து அருந்த ஜலதோஷம், மூக்கடைப்பு குறையும். 


மார்புச் சளி


ஏலக்காய்


ஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து தினமும் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச் சளி குணமாகும். 


நுரையீரல் சளி/ஜலதோஷம்


கற்பூரவல்லி


கற்பூரவல்லி இலைகளை பிழிந்து சாறு எடுத்து அரைக்கரண்டி வீதம் மூன்று வேளை குடித்து வந்தால் ஜலதோஷம், சளி குறையும். 


நுரையீரல் சளி/ஜலதோஷம், இருமல்


சீரகம்


சீரகத்தை பொன் வருவலாக வறுத்து பொடி செய்து பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட ஜலதோஷம் , இருமல் குணமாகும். 


நுரையீரல் சளி/சளிக் காய்ச்சல்


சுக்கு


சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி, தேவதாரு ஆகியவற்றை சேர்த்து இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு 1/8 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் ஜலதோஷத்தினால் ஏற்படும் காய்ச்சல் குறையும். 


நுரையீரல் சளி/ஜலதோஷம்


துளசி


துளசி இலை மற்றும் கற்பூரவல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அவித்து அதன் சாற்றைப் பிழிந்து ஒரு வேளைக்கு 10 மி. லி வீதம் 3 நாட்கள் குடித்து வந்தால் ஜலதோஷம், கோழை மற்றும் இருமல் குறையும். 


நுரையீரல் சளி/நுரையீரல் புண்


மருதம்பட்டை


மருதம்பட்டை, ஆடாதொடை பொடி இவற்றை வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடித்து வர நுரையீரலில் ஏற்பட்டுள்ள புண் சரியாகும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,