வரும் 18-20 ஆம் தேதிக்குள் இந்த இரண்டில் ஏதாவது ஒன்னும் நடக்கும்.

 

வரும் 18-20 ஆம் தேதிக்குள் இந்த இரண்டில் ஏதாவது ஒன்னும் நடக்கும்.


தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வங்கக் கடலில் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கடந்த வியானக்கிழமை ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் வடசென்னைக்கும் இடையே கரையை கடந்தது
இது புயலாக மாறவில்லை. இந்த நிலையில் இன்றைய தினம் அந்தமான் அருகே வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்கள் அது போல் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. இந்த நிலையில் கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருவதால் அந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
ஏற்கெனவே கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்துவிட்டதால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் புதிய காற்றழுத்தம் எந்த மாதிரி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில் வரும் 18 முதல் 20 ஆம் தேதிக்குள் இரு விஷயங்கள் நடைபெற வாய்ப்பிருக்கிறது.

புயலாக அவற்றில் முதலில் தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் தீவிரமாகி புயலாக மாறி, ஒரே தீவிரத்தன்மையுடன் இருந்தால் அது மேற்பகுதியில் நகர்ந்து மத்திய மற்றும் வடக்கு ஆந்திராவின் மேற்கு, வடமேற்கு திசையில் உயர்ந்த காற்றால் நகரும். இன்னொன்று அந்த குறைந்த காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்தமாகவோ புயலாகவோ மாறினார், அது குறைந்த காற்றழுத்தமாக வலுவிழந்து குறைந்த காற்றால் தெற்கு ஆந்திராவுக்கோ அல்லது வட தமிழகத்திற்கோ செல்லும் என தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி