தைப் பொங்கலை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு

 2022ம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு அறிவிப்பு!!




சென்னை : 2022ம் ஆண்டு தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.



இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை


'தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வருகிற 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், கீழ்க்காணும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்.

இத்தொகுப்பில், பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்பங்களுக்கு, மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் 20 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என்று  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் வெளியாகியிருக்கும் ஆணையில், “பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் வழங்கப்படும்; கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை, உப்பு” ஆகிய பொருட்களும் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2,15,48,060 குடும்பங்களுக்கு மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் தனது ஆணையில் குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,