இசையமைப்பாளர் ஜி ராமநாதன் நினைவு நாள்
புகழ்பெற்ற தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஜி ராமநாதன் நினைவு நாள் இன்று நவம்பர் 20. 1963
திருச்சிக்கு அருகிலுள்ள பிச்சாண்டார்கோவில் எனும் ஊரில், 1910ல் பிறந்தவர், ஜி.ராமநாதன். ஐந்தாவது வரை தான் படித்தார். சங்கீதம் முறையாக கற்றுக்கொள்ளவில்லை. வெறும் கேள்வி ஞானம் தான். தன், 18வது வயதில், 'பாரத கான சபா' நாடகக்குழுவில் சேர்ந்து ஹார்மோனியம் கருவியை வாசித்தார்.
1938-ல், எம்.கே.தியாகராஜ பாகவதர் தயாரித்த சத்தியசீலன் என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்ற படத்தில் சன்னியாசி வேடத்தில் நடித்தார்.ஹரிதாஸ், உத்தமபுத்திரன், அம்பிகாபதி, கப்பலோட்டிய தமிழன், அருணகிரிநாதர், மந்திரிகுமாரி, அமரதீபம், மதுரைவீரன், அரசிளங்குமரி, துாக்குத்துாக்கி உட்பட 82 படங்களுக்கு இசையமைத்துள்ளார். 1950-களில் வெளிவந்த சிவாஜி கணேசன், எம். ஜி. இராமச்சந்திரன் போன்றோரின் பெரும்பாலான சிறந்த திரைப்படங்களுக்கு இவரே இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
'மன்மத லீலையை வென்றார், வாழ்ந்தாலும் ஏசும், சிந்தனை செய் மனமே, முல்லை மலர் மேலே, யாரடி நீ மோகனி...' உட்பட காலத்தால் அழியாத பல பாடல்களை தந்தார். 1963, நவ., 20ல், தன் 53வது வயதில் மரணமுற்றார்
தகவல் >இளங்கோ
Comments