ஒரு மணிநேரம் 25 நிமிடங்கள் தற்காலிக அமெரிக்க (பொறுப்பு) அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்தார்

 அமெரிக்கா அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன்,79 பதவி வகிக்கிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ்,47 பதவி வகிக்கிறார். இன்று (நவ.20) அதிபர் ஜோ பைடனுக்கு 79 வது பிறந்த நாள்.
இந்நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக, அதிபர் ஜோ பைடன் திடீரென வாஷிங்டனில் உள்ள வால்டர் ரீட் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெருங்குடல் தொடர்பாக மயக்கவியல் (அனஸ்தீசியா) முறையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சிகிச்சையிலிருந்து குணமடையும் வரை தனது அதிபருக்குள்ள அதிகாரத்தை துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு தற்காலிகமாக வழங்கி உத்தரவிட்டார்.
பின்னர் சிகிச்சையிலிருந்து ஜோ பைடன் குணமடைந்தாகவும், அதுவரை ஒரு மணிநேரம் 25 நிமிடங்கள் தற்காலிக அமெரிக்க (பொறுப்பு) அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்தார் எனவும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவிச்சார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,