வேளாண் ஆராய்ச்சிக் கழகம் நடத்திய நுழைவுத் தேர்வில் இந்திய அளவில் மாணவி ஓவியா 2-வது இடம்

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் நடத்தும் முதுகலை பாடப் பிரிவுகளுக்கான நுழைவுத் தேர்வில் கால்நடைத் துறையில் திண்டுக்கல் மாணவி ஓவியா, அகில இந்திய அளவில் 2ஆவது இடம் பிடித்து சாதித்துள்ளார்.
திண்டுக்கல் 

திண்டுக்கல் அடுத்துள்ள பாலகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த அரியநாயகம்-சுமதி  தம்பதியரின்  மகள் ஓவியா 9(24). இவர் பி.வி.எஸ்.சி பட்டப்படிப்பு படித்துள்ளார்.

இந்நிலையில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் சார்பில், முதுகலைப் பாடப் பிரிவுகளுக்காக நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வில் பங்கேற்றுள்ளார்.

வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, மீன்வளம் உள்ளிட்டப் பல்வேறு துறைகளில், மத்திய பல்கலைக்கழகம்  மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் முதுகலைப் பாடப்  பிரிவில்  பயில்வதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.

அதன்படி 2021-22ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு, கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டது. அதில், மாணவி ஓவியா கால்நடைத் துறையில், அகில இந்திய அளவில் 2ஆவது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மொத்தம் 480 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வில், மாணவி ஓவியா 329 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதன் மூலம், மத்திய பல்கலை. மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் முதுகலைப் பாடப் பிரிவில் சேரவுள்ளார்.

அகில இந்திய அளவில் 2ஆவது இடம் பெற்று சாதனைப் படைத்துள்ள மாணவி ஓவியாவுக்கு, புதுச்சேரி கவர்னர் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் நடத்தும் முதுகலை பாடப் பிரிவுகளுக்கான நுழைவுத் தேர்வில் கால்நடைத் துறையில் திண்டுக்கல் மாணவி ஓவியா, அகில இந்திய அளவில் 2ஆவது இடம் பிடித்து சாதித்துள்ளார்.
திண்டுக்கல் 

திண்டுக்கல் அடுத்துள்ள பாலகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த அரியநாயகம்-சுமதி  தம்பதியரின்  மகள் ஓவியா 9(24). இவர் பி.வி.எஸ்.சி பட்டப்படிப்பு படித்துள்ளார்.

இந்நிலையில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் சார்பில், முதுகலைப் பாடப் பிரிவுகளுக்காக நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வில் பங்கேற்றுள்ளார்.

வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, மீன்வளம் உள்ளிட்டப் பல்வேறு துறைகளில், மத்திய பல்கலைக்கழகம்  மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் முதுகலைப் பாடப்  பிரிவில்  பயில்வதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.

அதன்படி 2021-22ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு, கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டது. அதில், மாணவி ஓவியா கால்நடைத் துறையில், அகில இந்திய அளவில் 2ஆவது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மொத்தம் 480 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வில், மாணவி ஓவியா 329 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதன் மூலம், மத்திய பல்கலை. மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் முதுகலைப் பாடப் பிரிவில் சேரவுள்ளார்.

அகில இந்திய அளவில் 2ஆவது இடம் பெற்று சாதனைப் படைத்துள்ள மாணவி ஓவியாவுக்கு, புதுச்சேரி கவர்னர் தமிழசை சவுந்தரராஜன், கால்நடைத்துறை பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை