Tuesday, November 9, 2021

மணிக்கு 48கிமீ வேகத்தில் பறக்கும் கார்

 


உலகிலேயே பறக்கும் காருக்கு அனுமதி அளித்த முதல் நாடு!! மணிக்கு 48கிமீ வேகத்தில் இயங்கக்கூடியது!


உலகிலேயே முதல்முறையாக பறக்கும் கார் ஒன்றிற்கு பாதுகாப்பு சான்றிதழை வழங்க ஜப்பான் அரசாங்கம் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகம் முழுவதிலும் ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு புரட்சிகள் அரங்கேறி வருகின்றன. 40, 50 வருடங்களுக்கு முன்பு புகையே வெளியிடாத, பெட்ரோல் (அ) டீசல் இல்லாமல் இயங்கும் வாகனங்கள் எதிர்காலத்தில் வெளிவரவுள்ளன என்றால் நம்மில் எத்தனை பேர் நம்பியிருப்போம் என்பது தெரியவில்லை.


Read more at: https://tamilஆனால் இன்று அது சாத்தியமாகி வருகிறது. இவ்வாறு எதிர்காலத்தில் சாலைகளில் பறக்கும் வாகனங்கள் ஆக்கிரமிப்பதற்கும் வாய்ப்புள்ளது. அத்தகைய நிலையினை உலகம் அடைய இன்னும் நீண்ட வருடங்களுக்கு காத்திருக்க வேண்டியதாக இருக்காது என்றே தோன்றுகிறது. ஏனெனில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஸ்கை ட்ரைவ் இதற்கான முயற்சிகளில் ஏற்கனவே ஈடுப்பட ஆரம்பித்துவிட்டது.
இதன்படி, சமீபத்தில் eVTOL (செங்குத்தாக புறப்படும் மற்றும் தரையிறங்கும் மின்சார விமானம்) என்ற பறக்கும் கார் கான்செப்ட்டை ஸ்கை ட்ரைவ் வெளியீடு செய்திருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த பறக்கும் காருக்கான அனுமதி சான்றிதழை ஜப்பான் அரசு வழங்கியுள்ளது. இதனால் தயாரிப்பு நிறுவனத்தால் இந்த கான்செப்ட்டை அடிப்படையாக கொண்டு பறக்கும் கார்களை உருவாக்க முடியும்.
ஸ்கை ட்ரைவ் ஜப்பானின் நிலம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் சுற்றுலா அமைச்சகத்திடம் (MLIT) பாதுகாப்பு சான்றிதழை பெற்றுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. 2018இல் தனது பறக்கும் கார் முன்மாதிரியை முதன்முறையாக காட்சிப்படுத்திய ஸ்கை ட்ரைவ் நிறுவனத்திற்கு இந்த பாதுகாப்பு சான்றிதழ் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கு மிக பெரிய உந்துதலாக அமைந்துள்ளது.
2018இல் காட்சிப்படுத்தப்பட்டதற்கு பிறகு, முதல் வெற்றிக்கரமான பைலட் விமான சோதனை 2020இல் மேற்கொள்ளப்பட்டது. ஸ்கை ட்ரைவ் நிறுவனத்தின் பறக்கும் கார் மாடலான நமெட் எஸ்டி-03 மொத்தம் 8 உந்துவிசை மோட்டார்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அதிகப்பட்சமாக மணிக்கு 48 kmph வேகத்தில் இயங்கக்கூடியதாக உள்ளது

தற்போதைக்கு இந்த பறக்கும் காரினை 10 நிமிடங்களுக்கு மட்டுமே பறக்க வைக்க முடியும் என கூறும் ஸ்கை ட்ரைவ் தற்போது பாதுகாப்பு சான்றிதழ் கிடைத்துள்ளதால் இதன் மூலமாக நீண்ட நேரத்திற்கு பறக்கக்கூடிய வகையில் இதனை மேம்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல் தற்போதைக்கு இந்த பறக்கும் வாகனம் 30 கிலோ வரையிலான எடையினை மட்டுமே சுமந்து பறக்கக்கூடியதாக உள்ளது.

ஸ்கை ட்ரைவ் எஸ்டி-03 ஆனது திறந்த நிலையிலான கேபினை கொண்டுள்ளது. இதில் தற்சமயம் ஒருவர் மட்டுமே அமர்ந்து வாகனத்தை கண்ட்ரோல் செய்ய முடியும். ஆனால் எதிர்காலத்தில் அதிக நபர்கள் அமரக்கூடிய வகையில் பறக்கும் வாகனங்கள் தயாராகுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
2025ஆம் ஆண்டிற்குள் ஜப்பானின் ஒசாகா விரிகுடா பகுதியில் பறக்கும் டாக்ஸி சேவையை வழங்குவதில் டோக்கியோவை சேர்ந்த ஸ்கைட்ரைவ் தற்சமயம் தீவிரமாக உள்ளது. பணியிடங்களில், குறிப்பாக மலைப்பகுதிகளில் தளவாடங்களை செயல்படுத்துவதற்கு இந்த தயாரிப்பு இன்றியமையாததாக இருக்கும் என்று இந்த நிறுவனம் கூறுகிறது.

இந்த விஷயத்தில் நிச்சயம் ஸ்கை ட்ரைவ் நிறுவனம் விரைவில் ஒரு சரியான முடிவை எடுக்கும். இருப்பினும் இவ்வாறான மேம்பாடுகள் குறித்த எந்த அறிவிப்பையும் இந்த டோக்கியோ ஸ்டார்ட்-அப் நிறுவனம் தற்போதுவரையில் வெளியிடவில்லை. மற்றொரு ஜப்பானிய ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஏ.எல்.ஐ டெக்னாலஜிஸ் சமீபத்தில் இதேபோன்ற ஹோவர்பைக்கை வெளியீடு செய்திருந்தது.
மிட்சுபிஷி எலக்ட்ரிக் மற்றும் கியாசெரா-ஆல் ஆதரிக்கப்படும் ஏ.எல்.ஐ டெக்னாலஜிஸ் நிறுவனம் அடுத்த ஆண்டில் 680,000 டாலர்கள் என்ற குறைவான விலையில் வாடிக்கையாளர்களுக்கு அதன் தயாரிப்புகளை டெலிவிரி செய்ய திட்டமிட்டுள்ளது. சிடி-03 பறக்கும் காரினை பொறுத்தவரையில், இதனை தனித்தனியாக விற்பனை செய்யாமல், தனது ட்ரோன் சேவையின் ஓர் அங்கமாக ஸ்கை ட்ரைவ் நிறுவனம் மாற்றும் என கூறப்படுகிறது.
courtesy:https://tamil.drivespark.com/

No comments: