இளையராஜாவிடம் 4 மணி நேரம் பயிற்சி எடுத்த தனுஷ்.

 




இளையராஜாவிடம் 4 மணி நேரம் பயிற்சி எடுத்த தனுஷ்...எதுக்கு தெரியுமா 

இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் ஒரு பாடலாவது பாட வேண்டும் என்பது பின்னணி பாடகர்கள் அனைவரின் கனவாக இருந்து வருகிறது. இதை அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் மிகப் பெரிய பெருமை, கெளரவமாக கருதுகிறார்.

தற்போது இந்த பெருமை நடிகர் தனுஷிற்கு கிடைத்துள்ளது. தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் நடித்த ஹாலிவுட் படமான தி கிரே மேன் விரைவில் ரிலீசாக உள்ளது. அதோடு சில படங்களில் பின்னணியும் பாடி வருகிறார்.
இளையராஜா இசையில் விடுதலை டைரக்டர் வெற்றிமாறன் தற்போது சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தின் வேலைகளை கவனித்த வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. க்ரைம் த்ரில்லர் படமான விடுதலை படத்திற்கு தான் இளையராஜா தற்போது இசையமைத்து வருகிறார்
எல்ரெட் குமார், ஆர்எஸ் இன்ஃபோடைன்மென்ட் பேனரில் விடுதலை படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்திற்காக தான் தனுஷ் ஒரு பாடல் பாடி உள்ளார். இந்த பாடலை மிகச் சரியாக பாடுவதற்காக தனுஷிற்கு காலை 11 மணி முதல் பகல் 3 மணி வரை என மொத்தம் 4 மணிநேரம் பயிற்சி கொடுத்தாராம் இளையராஜா. இந்த தகவலை சமீபத்தில் நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் டைரக்டர் வெற்றிமாறனே தெரிவித்துள்ளார்.

நான்கு மணி நேரம் பயிற்சி அளிக்கப்பட்ட பிறகு தனுஷ் இந்த பாடலை பாடி உள்ளார். இந்த பாடலை ரெக்கார்டிங் செய்த போது இளையராஜாவோ, தனுஷோ கொஞ்சம் கூட சோர்வடையவில்லையாம். இதை பார்த்த அனைவரும் அசந்து போய் விட்டனராம்.

இது தான் ஹைலைட் சூரி முதல் முறையாக விடுதலை படத்தில் லீட் ரோலில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பாவ கதைகள் படத்தில் நடித்த பவானி ஸ்ரீ நடித்துள்ளார். இந்த படத்தில் மிக முக்கியமான ரோலில் விஜய் சேதுபதி நடிக்கிறாராம். இவர் வரும் காட்சிகள் தான் படத்தின் மிகப் பெரிய ஹைலைட் காட்சிகளாம்.

இறுதிக்கட்டத்தில் விடுதலை முதல்கட்ட படப்பிடிப்பை சத்தியமங்கலத்தில் முடித்த உடனேயே படக்குழுவினர் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டு விட்டனர். இந்த போஸ்டரில் சூரி போலீசாகவும், விஜய் சேதுபதி கைதியாகவும் இருப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. விடுதலை படக்குழு சமீபத்தில் தான் செங்கல்பட்டில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்தது.

இப்படி ஒரு பிளான் இருக்கா பிரகாஷ் ராஜ் மற்றொரு முக்கிய கேரக்டரிலும், கெளதம் மேனன் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர். கிட்டதட்ட முடிவடையும் நிலையில் உள்ள இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படுவதற்கு முன், முக்கிய சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட்டுக் காட்டப்படலாம் என கூறப்படுகிறது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,