5 நிமிடத்தில் மெதுவடை ரெடி பண்ணுங்க!

 


வீட்டில் இட்லி மாவு இருக்கா? 5 நிமிடத்தில் மெதுவடை ரெடி பண்ணுங்க!இப்போது இட்லி மாவில் ஐந்தே நிமிடத்தில் மெதுவடை எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்

 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வடை அனைவரும் விரும்பி உண்ணும் 5 நிமிடத்தில் அதுவும் இட்லி மாவில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள்:-

இட்லி மாவு – 2 கப்
ரவை – 11/2 ஸ்பூன்
கடலை மாவு – 3 டிஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
பேக்கிங் சோடா – சிறிதளவு
வெங்காயம் – 1 கப்
மிளகு – 2 ஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 3
வெங்காய தாள் – தேவைக்கேற்ப
அரிசிமாவு – 11/2 ஸ்பூன்

மொறுமொறு மெதுவடை சிம்பிள் செய்முறை:-

மெதுவடை தயார் செய்ய முதலில் ஒரு அகலமான பாத்திரம் எடுத்து அதில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்பின்னர் அனைத்தையும் ஒன்றாக கலந்து நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

தொடர்ந்து அடுப்பில் ஒரு காடாய் வைத்து எண்ணெய் சூடேற்றவும்.

அதன்பிறகு கையில் தண்ணீர் தொட்டு மாவை சிறுசிறு உருண்டைகளாக எடுத்து கையில் வைத்து தட்டி எண்ணெய்க்குள் இடவும்.

நன்றாக வேகும் வகையில் அதனை திருப்பிவிடவும். வடை பொன்னிறமானதும் எடுத்து விடவும்.

இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான மொறுமொறு மெதுவடை தயாராக இருக்கும். அவற்றை தேங்காய் அல்லது தக்காளி சட்னியுடன் ருசித்து மகிழவும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,