விலை 60 ஆயிரம் ரூபா.இ-ஸ்கூட்டர்

 விலை 60 ஆயிரம் ரூபா... ரேஞ்ஜ் 100 கிமீ... ஒரே நாளில் 4 புதிய இ-ஸ்கூட்டர்களை களமிறக்கிய இந்திய நிறுவனம்

இ-ஸ்கூட்டர்
60 ஆயிரம் ரூபாய்க்கு அதிக தூரம் பயணிக்கக் கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மின் வாகன தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் பற்றிய இன்னும் பல முக்கிய தகவல்களை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். 


மிதிவண்டிகள், ரிக்ஷாக்கள், மூன்று சக்கர ட்ரே-சைக்கிள்கள் மற்றும் பைக்குகள் ஆகிய ஐசிஇ எஞ்ஜின் கொண்ட வாகனங்களை மின்சார வாகனமாக மாற்றும் நிறுவனமே ராஜ் எலெக்ட்ரோமோட்டீவ்ஸ். இந்த பிரிவில் மிகவும் கைதேர்ந்த நிறுவனமாக அது செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில், மின் வாகன உற்பத்தியிலும் களமிறங்கும் வகையில் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட மற்றுமொரு நிறுவனமாக க்ரெட்டா எனும் புதிய பிராண்ட்.

இந்த நிறுவனத்தின் வாயிலாக தற்போது புதிய மாடல் மின்சார ஸ்கூட்டர்களை ராஜ் எலெக்ட்ரோமோட்டீவ்ஸ் உற்பத்தி செய்திருக்கின்றன. அவற்றை இந்திய மின்சார வாகன சந்தையில் க்ரெட்டா பிராண்டின்கீழ் தற்போது விற்பனைக்கு அறிமுகமும் செய்திருக்கின்றது.
ஒட்டுமொத்தமாக நான்கு இ-ஸ்கூட்டர் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அறிமுகத்தின் வாயிலாக நிறுவனம் இந்திய மின் வாகன சந்தையில் கால் தடம் பதித்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஒட்டுமொத்தமாக நான்கு இ-ஸ்கூட்டர் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அறிமுகத்தின் வாயிலாக நிறுவனம் இந்திய மின் வாகன சந்தையில் கால் தடம் பதித்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த இருசக்கர வாகனங்கள் அனைத்தும் தனித்துவமான நிற தேர்வுகள் மற்றும் உடல் அமைப்புகள் ஆகியவற்றுடன் விற்பனைக்கு வந்திருக்கின்றன. அதாவது, அறிமுகத்தைப் பெற்றிருக்கும் அனைத்து மின்சார ஸ்கூட்டர்களும் ஒன்றிற்கு ஒன்று தனித்துவமான தோற்றம் மற்றும் நிற தேர்வுகளைக் கொண்டிருக்கின்றன.

உதாரணமாக ஹார்பர் மற்றும் ஹார்பர் இசட்எக்ஸ் மின்சார ஸ்கூட்டர்களுக்கு ஸ்போர்ட்டியான தோற்றம், ஷார்பான பாடி பேனல்கள் மற்றும் மெல்லிய டர்ன் இன்டிகேட்டர்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு இடையிலேயே தனித்துவமான தோற்றத்தை வழங்கும் வகையில் ஹார்பர் மாடலில் இரட்டை அமைப்பு கொண்ட ஹெட்லேம்ப்பும், ஹார்பர் இசட்எக்ஸ் மாடலில் ஒற்றை ஹெட்லேம்ப்பும் வழங்கப்பட்டிருக்கின்றது.

ஹேண்டில் பார் கவுல், ரியர் வியூ கண்ணாடிகள் மற்றும் இருக்கைகள் ஆகியவற்றில் இரண்டும் ஒரே மாதிரியானதாக காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. இரு ஸ்கூட்டர்களிலும் வழங்கப்பட்டிருக்கும் இருக்கைகள் ஆனது அதிக சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில், இவெஸ்பா ஸ்கூட்டர் ரெட்ரோ ஸ்டைல் தோற்றம் கொண்ட மின்சார இருசக்கர வாகனமாக இருக்கின்றது. இது, இந்த இருசக்கர வாகனம் வெஸ்பா ஸ்கூட்டரின் பெயரை மட்டும் தாங்கியிருக்கவில்லை, அந்த ஸ்கூட்டரின் ஸ்டைல் தாத்பரியங்கள் சிலவற்றையும் தாங்கியிருக்கின்றது என்பதைநமக்கு தெரியப்படுத்துகின்றது.
இ-வெஸ்பாவின் கிளாசியான தோற்றத்திற்காக வளைவு-நெலிவுகள் நிறைந்த பாடி பேனல்கள், வட்ட வடிவ ஹெட்லேம்ப், கிளாசினாய ஏப்ரான் மற்றும் கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக இதனை வெஸ்பா ஸ்கூட்டரைப் போலவே காட்சியளிக்கச் செய்கின்றது. நிச்சயம் இந்த ஸ்கூட்டர் சாலையில் பயணிக்கும் இது வெஸ்பா ஸ்கூட்டர் என்றே நினைக்க தோன்றும்.
இதற்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் இருக்கும் கிளைட் மின்சார ஸ்கூட்டர் மேலே பார்த்த மூன்று ஸ்கூட்டர்களைக் காட்டிலும் தனித்துவமான வசதிகளைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது. தனித்துவமான உடல் தோற்றத்தை இது பெற்றிருக்கின்றது. வட்ட வடிவ ஹெட்லேம்ப், வட்ட வடிவ பின்பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள், ஹேண்டில் பார், காம்பேக்ட் ஃப்ளை ஸ்கிரீன் மற்றும் பின்பக்க பயணிக்கான பேக்ரெஸ்ட் உள்ளிட்டவை க்ளைட் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றது.
க்ரெட்டாவின் அனைத்து மின்சார ஸ்கூட்டர்களும் நகர மற்றும் தினசரி பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஸ்கூட்டர்களில் 48 வோல்ட் / 60 வோல்ட் லித்தியம் ஆகிய அயன் பேட்டரி பேக்குகள் வழங்கப்படுகின்றன. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 70 கிமீ தொடங்கி 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்

இருசக்கர வாகனங்களை முழுமையாக சார்ஜ் செய்ய நான்கு மணி நேரங்கள் தேவைப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலே கூறப்பட்ட பேட்டரிகள் தேர்வு மட்டுமின்றி இன்னும் சில கஸ்டமைசேஷன் வசதியையும் வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒட்டுமொத்த 22 நிற தேர்வுகளில் இருசக்கர வாகனங்கள் விற்பனைக்குக் கிடைக்கும் என க்ரெட்டா அறிவித்திருக்கின்றது.

அந்தவகையில், ஹார்பர், ஹார்பர் இசட்எக்ஸ் மற்றும் இவெஸ்பா ஸ்கூட்டர்களில் ட்ரம்-டிஸ்க் காம்போ வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், க்ளைட் மாடலில் மட்டும் இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், கூடுதல் ஸ்டோரேஜ் வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது.

ரூ. 60 தொடங்கி ரூ. 92 ஆயிரம் வரையில் இ-ஸ்கூட்டர்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர்களை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே நேபால் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து ஐரோப்பிய சந்தையிலும் மின்சார வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.
நன்றி: https://tamil.drivespark.com/





Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,