காலை உணவுக்கு 7 வகையான சட்னி லிஸ்ட்

 

காலை உணவுக்கு 7 வகையான சட்னி லிஸ்ட்

தோசை, இட்லி, இடியாப்பம், அடை தோசை, ரொட்டி, பொங்கல், வடை என எந்த ரெசிபியாக இருந்தாலும், சட்னி எப்போதும் சுவையை அதிகரிக்கிறது. சட்னிக்கு அடிப்படையில் பூண்டு, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை போன்றவை தேவைப்படுகிறது. உணவு பிரியர்களுக்காக இங்கே சில சட்னி ரெசிபிகள் பற்றி ஒரு ஆய்வு

தக்காளி சட்னி :அனைவரது வீடுகளிலும் பிரபலமான சட்னிகளில் தக்காளி சட்டினியும் ஒன்று. தக்காளியில் வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் ஈ மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் போன்ற முக்கியமான வைட்டமின்கள் நிரம்பியிருப்பதால் அவை சுவையானது மட்டுமல்ல, மிகவும் சத்தானவை. தக்காளியில் லைகோபீன் என்ற பயோஆக்டிவ் கலவை உள்ளது, இது உங்கள் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும். சிலர் தக்காளி சட்னியில் சர்க்கரை சேர்க்கிறார்கள், ஆனால் அதற்கு பதிலாக வெல்லம் சேர்ப்பது நல்லது.

பூண்டு சட்னி : இந்தியாவில் அனைத்து வகையான உணவுகளிலும் பூண்டு சேர்ப்பது வழக்கம். 2020ல் வெளியான ஆய்வு ஒன்றில், பூண்டில் ஆன்டிஆக்ஸிடன் பண்புகள் நிறைந்திருப்பதால், நம்பமுடியாத அளவிற்கு சத்தானது மற்றும் பல நோய்களைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது என தெரியவந்தது. அடிக்கடி பூண்டு சேர்த்து சமைக்கும் உணவை சாப்பிடுவது உயர் இரத்த அழுத்த அபாயத்தை குறைக்கும், நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கும் என கூறப்படுகிறது. பூண்டு சட்னி, தேங்காய், வேர்க்கடலை மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து தயார் செய்யப்படுகிறது.
புதினா-கொத்தமல்லி சட்னி : சூடான இட்லி, தோசைக்கு புதினா-கொத்தமல்லி சட்னிகு மாற்றாக எடுத்தும் இல்லை என்றே கூறலாம். புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் நார்ச்சத்தும் உள்ளதால் செரிமானத்தை தூண்டுகிறது. கொத்தமல்லி, புதினா இலைகள், வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்கு வதக்கி ஆறியதும் தண்ணீர் சேர்த்து அரைத்தால் புதினா - கொத்தமல்லி சட்னி ரெடி.

தேங்காய் சட்னி : தேங்காய் சட்னி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானது, தேங்காய் சட்னியை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. இது நன்கு விளைந்த தேங்காய், சிவப்பு மிளகாய், கொத்தமல்லி இலைகள் மற்றும் கடுகு பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. தேங்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது வளர்சிதை மாற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சினைகளையும் தடுக்கிறது. எனவே தேங்காய் சட்னியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

வேர்க்கடலை சட்னி : வேர்க்கடலையில் அதிக கலோரிகள், குறைவான கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் நிறைந்துள்ளது. மேலும் வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளதால் இது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. வேர்கடலை மிதமாக வறுத்து எடுத்து, இதனுடன் தக்காளி, வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து இந்த சட்னி தயார் செய்யப்படுகிறது. இதனை இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிடலாம்.

மாங்காய் சட்னி : வசந்த காலம் முதல் கோடை வரை மட்டுமே கிடைக்கும் என்றாலும், மாங்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளது. மேலும் இதிலுள்ள தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. மாங்காய் இயற்கையில் புளிப்பு சுவை உடையது என்பதால், இந்த சட்னியில் வெல்லம் சேர்க்கப்படுகிறது. மாங்காய் சட்னியை அடிக்கடி உணவில் சேர்த்துவர இதிலுள்ள நியாசின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

புளி சட்னி : புளி சட்னி சிலரது வீட்டில் தான் செய்வார்கள். ஆனால் இந்த சட்னி சுவையாக இருக்கும். சின்ன வெங்காயம், புளி, உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து இந்த சட்னி தயார் செய்யப்படுகிறது. புளியம்பழத்தில் அதிக அளவு வைட்டமின்கள் பி 1, பி 2, பி 3 மற்றும் பி 5, மக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உள்ளன. மேலும் இதிலுள்ள ஃபிளாவனாய்டுகள் கூடுதல் ஆரோக்கியத்தை வழங்குகிறது
நன்றி https://tamil.news18.com/

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,