சாண்டில்யன் ஒரு குமுத எழுத்தாளர்

 எழுத்தாளர் சாண்டில்யனின் இயற்பெயர் பாஷ்யம் அய்யங்கார்.




சென்னை தி.நகரில் சிவா விஷ்ணு கோயிலுக்கு எதிரில் இருக்கும் மஹாலெஷ்மி தெருவில் இவர் வசித்த பொழுது நாலைந்து தடவைகள் நேரில் சென்று பேசிப் பழகியிருக்கிறேன்.
அப்படி ஒரு தடவை அவரைச் சந்தித்த பொழுது இதே விஷயத்தை-- எழுத்தாளருக்கு அமைந்து போகிற பத்திரிகை
விஷயத்தை-- அவரிடம் பகிர்ந்து கொண்ட பொழுது
“அப்படியா?..” என்று ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டார். வாசகர்களிடம் பந்தா காட்டாமல்
இனிமையாக
பழகுவதில் சாண்டில்யனுக்கு இணை சாண்டில்யன் தான்.
இப்படிப்பட்ட சாண்டில்யனுக்கு அமைந்து போன பத்திரிகை ‘குமுதம்’ தான். அந்தப் பத்திரிகையில் அவர் சரித்திரத் தொடர் பிரசுரமாகும் பொழுது அந்தத் தொடரே தனிக் களை கொண்டு பிரமாதமாக இருக்கும். சொல்லப் போனால் குமுத்த்திற்கு எழுதுவதற்கு முன்னால் அவர் ‘அமுதசுரபி’ பத்திரிகையில் ஜீவபூமி,
மலைவாசல் போன்ற தொடர்களை எழுதியிருக்கிறார். இருந்தாலும் குமுத்த்தில் அவர் கடல்புறா, யவனராணி போன்ற தொடர்களை எழுதிய காலம் மறக்கமுடியாதது. குமுத்த்தில் அவர் எழுதிய முதல் சரித்திரத் தொடர் கன்னிமாடம். இந்தக் கதைக்கு ஓவியர் ஸாகர் படம் வரைந்திருந்தார் என்று நினைவு. இதைத் தவிர மற்ற தொடருக்கெல்லாம் லதா தான் சாண்டில்யன் கதைகளுக்கு ஓவியம் வரைந்தார். சாண்டியல்யன் கதா பாத்திரங்களுக்கு உருவம் கொடுத்து நடமாட விட்டவர் லதா. குமுதம், சாண்டில்யன், ஓவியர் லதா இதுவும் அமைந்து போய்விட்ட ஒரு வெற்றிகரமான கூட்டணி. ஆனாலும் நான் அழுத்திச் சொல்ல விழைவது என்னவென்றால் வேறொரு பத்திரிகையில் இதே சாண்டியல்யன் சரித்திரக் கதை எழுதி லதா ஓவியம் வரைந்திருந்தாலும் குமுதத்தில் சாண்டில்யனைப் படித்த மாதிரி இருக்காது என்பது தான்!.. இதற்குக் காரணம் என்னவென்பதை சாண்டியல்யனின் எழுத்துக்களில் தோய்ந்த வாசகர்கள் தாம் சொல்ல வேண்டும்.
ஆக, சாண்டில்யன் ஒரு குமுத எழுத்தாளர் என்று அழுத்தமாகச் சொல்ல்லாம்.
நன்றி: பூவனம்
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,