சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’பற்றி எனது கருத்துகள்/உமா தமிழ்

 சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்பற்றி

எனது கருத்துகள்






சமீபத்திலே சோனி லைவ் ஓடிடி தளத்தில்பார்த்த படம்

சோனி லைவ் ஓடிடி தளத்தில்

 சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்பற்றி

எனது கருத்துகள்

இது வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த சரஸ்வதி, தேவகி, சிவரஞ்சனி ஆகியோரது வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஒரு அன்தாலாஜி யாக வெளிவந்துள்ளது

 

, இந்தப்படம் கேரள சர்வதேச திரைப்பட விழா, பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா, புனே சர்வதேச திரைப்பட விழா மட்டுமல்லாமல் ஜப்பான், ஸ்வீடன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் திரைபப்ட விழாக்களிலும் போட்டியிட்டு பல்வேறு விருதுகளையும் சிறந்தப் படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது என தெரிந்து கொண்டேன்

 முதல் கதை காலகட்டம் 1980

சரஸ்வதி


தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சந்திரனின் (கருணாகரன்) மனைவி சரஸ்வதி (காளீஸ்வரி ஸ்ரீனிவாசன்). கைக்குழந்தையுடன் இருக்கும் அவர் செய்யும் சிறு சிறு விஷயங்கெளுக்கெல்லாம் எரிந்து விழுந்து ஒரு நாள்  இரவில் குழந்தை அழுவதால் எரிச்சலடையும் கருணாகரன் மனைவியை அடிக்கிறார்.

அதற்குப்பின்….

 அவரை ஒரே ஒரு வார்த்தையான என்னை அடிக்க வேண்டாம் என  எதிர்த்துப் பேசும் சரஸ்வதியின் வாழ்க்கை அன்று முதல் மாறுகிறது.

தேவகி

 காலகட்டம் 1995


ஒரு அரசு அலுவலகத்தில் உயர் பொறுப்பில் இருக்கிறார் தேவகி (பார்வதி). அதே அலுவலகத்திலேயே அவரது கணவர் மணியும் (சுந்தர் ராமு) பணிபுரிகிறார். நடுத்தர வர்க்கம் .கூட்டுக்குடும்பம். .மகிழ்ச்சியாகவே சென்று கொண்டிருந்த  அவர்களது வாழ்வில் ஒரு டைரியால் திடீரென ஒரு புயல் வீசுகிறது. அதுவே தேவகியின் வாழ்க்கையில் ஒரு முக்கிய மாற்றத்துக்கு அடித்தளமாகிறது.

சிவரஞ்சனி

காலகட்டம் 2007


சிறு வயது முதலே ஓட்டப்பந்தயத்தில் வீராங்கனையாகத் திகழ்ந்த ர் சிவரஞ்சனி (லஷ்மி ப்ரியா) . கல்லூரி சார்பாக பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு கோப்பைகளை வெல்பவருக்கு படிப்பை முடிக்கும் முன்னரே ஹரியுடன் (கார்த்திக் கிருஷ்ணா) திருமணம்  நடந்து விடுகிறது.அவரது அந்த கனவான ஓட்டப்பந்தய வீராங்கனை பலிக்காமல்  குழந்தையை வயிற்றில் சுமந்தபடி கல்லூரிக்கு வருகிறார். தன்னுடைய கனவை மனதில் சுமந்தபடியே கணவன், மாமியார், குழந்தை ஆகியோரது விருப்பத்துக்கேற்ப  இன்றைய தற்கால வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டு  இருக்கிறார்.

         ஒட்டு மொத்தமாக இந்த மூன்று படங்களுமே வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த பெண்களைப் பற்றிய கதை என்றாலுமே கிட்டத்தட்ட மூவரது வாழ்விலும் ஒரே விஷயங்கள்தான் மாறாமல் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. மிகவும் ஏழ்மையான சூழலில் காலத்தைத் தள்ளும் சரஸ்வதி வாயைத் திறந்தாலே கணவர் எரிந்து விழுகிறார். அடிக்கிறார். பதிலுக்கு அவர் சொல்லும் ஒரு வார்த்தையை கணவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதன்பின் கணவர் எடுக்கும் முடிவால் அவளது வாழ்க்கையே திசை மாறிப் போகிறது

. சரஸ்வதியின் நிலை இப்படியென்றால் சமூகத்தின் உயர்நிலையில் இருக்கும் தேவகி மற்றும் சிவரஞ்சனியின் இவர்களின் வாழ்க்கையிலும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. பெரிய வீடு, வேலை, வசதி இருந்தாலும் அவர்களது வாழ்க்கையை தீர்மானிப்பவர் ஒரு ஆணாகவே இருக்கிறார்.

மூன்று படங்களின் நாயகிகளான காளீஸ்வரி சீனிவாசன், பார்வதி, லஷ்மி ப்ரியா மூவருமே தங்கள் பாத்திரங்களின் தன்மை உணர்ந்து  இயல்பாக நடித்துள்ளனர்.

 வழக்கமாக நகைச்சுவை பாத்திரங்களில் வரும்  கருணாகரன் தனது ஒரு புதிய பரிணாமத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். சுந்தர் ராமு, கார்த்திக் கிருஷ்ணா, ஜி.மாரிமுத்து என மற்றவர்கள் அனைவருமே தங்கள் இயல்பான நடித்துள்ளனர்

படத்தின் இயக்கம் வசந்த் (சாய்).

 

படத்தில  எந்தவொரு திடீர் திருப்பம், இல்ல  வசனம் குறைவு, அதிரவைக்கும் இசை இல்லை

. நம் வீட்டில் ஒரு கேமராவை வைத்துப் படமெடுத்தால் என்னவெல்லாம் நடக்குமோ அதையே படமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் என சொல்லலாம்

எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோரது சிறுகதைகளைப் படமாக்கியுள்ள இயக்குநர் அவற்றில் வணிக ரீதியான கமர்ஷியல் அம்சங்களை சேர்க்கல மற்றும் அவர்  எந்த காம்பரமைஸ் இல்லாமல்  அந்தந்தக் கதைகளுக்கு நியாயம் செய்துள்ளார் என சொல்லலாம்

மூன்று படங்களிலுமே முடிவு இதுதான் என்று இயக்குநரே தீர்ப்பை எழுதாமல் அதைப் பார்வையாளர்களிடமே விட்டது சிறப்பு

என்.கே.ஏகாம்பரம், ரவீ ராயின் ஒளிப்பதிவு படத்தின் கதைக்களத்துக்கு   பக்க பலம்

 

இசை ராஜா சார்

இசை ஒலிக்க வேண்டிய இடத்தில் ஒலித்து மவுனமாக வேண்டிய இடங்களில் மவுனம் என சொல்லாம்

 

சரஸ்வதி படத்தில் வரும் பின்னணி இசையில் இளையராஜா அற்புதம்  மனதைப் பிசைகிறார்

இந்த மூன்று கதைகளை மூன்று எழுத் தாளர்களின் படைப்பு என சொல்ல பட்டு இருக்கு. இந்த மூன்றில் சரஸ்வதி. தேவகி. சிவரஞ்சனி யார் யாருடையது னு தெரியல

பொதுவா டைட்டில் கார்டு ல வருது

இந்த மூன்று பாத்திரங்களில் சிவரஞ்சனி பாத்திரம் கதை சட்டென மனதில்  ஒட்டிக்கொள்கிறது

.


இந்த மூன்று பாத்திரங்களும் இந்த ஆணின் ஆதிக்கத்தில் தங்களுடைய உணர்வுகள் சாகடிக்க பட்டு அவனின் ஆதிக்கத்தில் தான் வாழ் வதை சகித்து கொண்டு வேறு வழி தெரியாமல் இருப்பது போலவே இயக்குனர் படைத்துள்ளார்

 

இந்த படத்தில் மூன்று பேருக்கும் ஒவ்வொரு சமயத்தில் உயரத்தில் இருக்கும் ஒரு பொருளை தேடுவது போல் காட்சி இருக்கிறது

சரஸ்வதி பொருள் கிடைக்காமல் விழுந்து விடுவார்

தேவகி அவர் தேடிய பொருள் கிடைத்துவிடும்

சிவரஞ்சனி க்கு கிடைக்காது

இயக்குனர் இந்த symbolic shots மூலம் அந்த மூன்று பாத்திரங்களின் குணாதிசயத்தை சொல்லி விடுகிறார்

சரஸ்வதி எதிர்ப்பு காட்டி பின் அதனால ஏற்படும் வாழ்க்கையை  ஏற்று கொள்கிறார்

தேவகி எதிர்த்து தனியா போய்விடுகிறார்

சிவரஞ்சனி எதிர்க்க முடியாம கிடைத்தை ஏற்று கொள்கிறார்

பெண்கள் எந்த உயரத்துக்குச் சென்றாலும் அவர்களது வாழ்க்கை இன்னும் ஆண்களையே சார்ந்திருக்கும்படியான சமூகக் கட்டமைப்பை மாறவில்லை என்பதை பல காட்சிகளின் வழியே நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல்

. வழக்கமான பெண்களை மையமாகக் கொண்ட படங்களில் அழுகை  மற்றும் வசனங்கள் நம்மை படுத்தும்

இயல்பான  காட்சிகளின் வழியே பெண்களின் நிலையைப் படமாக்கியதற்ககாக இயக்குநர் வசந்த்தை மனதாரப் பாராட்டலாம்.கடைசி காட்சியில்

சிவரஞ்சனியின் அந்த ஓட்டம் ,பின் அவர் தன்னை மறந்து சிரிப்பது

இன்னும் மனதில் நிற்கிறது

  ---உமா தமிழ்

 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,