மஞ்சள் நீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் பல நல்ல பலன்கள்.

 மஞ்சள் நீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் பல நல்ல பலன்கள்...மஞ்சள் நீர் தயாரிக்கும் முறை:


முதலில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது தூய மஞ்சள் தூள் கலந்து கொள்ள வேண்டும். 


√ மஞ்சள் கிழங்கு வாங்கி அதை அரைத்து சலித்து எடுப்பது சிறந்தது.


√ இந்த பானத்தை வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போதே குடித்து விட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 


√ காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.


இப்படி குடிப்பதால் கிடைக்கும்  நன்மைகள் என்ன...


டைப்-2 சர்க்கரை நோயை தடுக்கும்...


மஞ்சள் கலந்த நீரைக் குடிப்பதால் டைப்-2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, இரத்த சர்க்கரை அளவு சமநிலைப்படும்.


வீக்கத்தை எதிர்த்துப் போராடும்...


நாள்பட்ட வீக்கம் /அழற்சியானது பல நோய்களால் ஏற்படலாம். இருப்பினும், மஞ்சள் கலந்த நீரை ஒருவர் ஏழு நாட்கள் தொடர்ந்து குடித்து வரும் போது, மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஒரு நல்ல மருந்தாக செயல்படும்.


இதய ஆரோக்கியம்...


மஞ்சளில் உள்ள குர்குமின் பண்புகள், இதயத்திற்கு செல்லும் தமனிகளில் ப்ளேக் படிகங்களைத் தடுக்கும் மற்றும் இரத்தம் உறைவதில் இருந்து விடுவித்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


ஆர்த்ரிடிஸ் பிரச்சனையை நீக்கும்...


மஞ்சள் ஒரு வலி நிவாரணியாக இருந்து செயல்பட்டு மூட்டு வலியை குறைக்கிறது.  மஞ்சள் நீர் குடித்தால் ஆர்த்ரிடிஸ் பிரச்சனை நீங்கும்.


மூளை ஆரோக்கியம்...


ஒரு ஆராய்ச்சியின் படி, அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற அறிவாற்றல் கோளாறுகளுக்கும், மூளையில் உள்ள நியூரோட்ரோபிக் காரணி எனப்படும் ஒரு குறிப்பிட்ட வகை வளர்ச்சி ஹார்மோனின் குறைவிற்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது கண்டறியப்பட்டது.


கல்லீரல் பாதுகாப்பு...


மஞ்சள் நீர் நிச்சயமாக கல்லீரலை நச்சு சேதத்திலிருந்து பாதுகாப்பதோடு, சேதமடைந்த செல்களை மீண்டும் உருவாக்குகிறது. மேலும் பித்த உற்பத்தியைத் தூண்டுகிறது மற்றும் பித்தப்பை செயல்பாட்டை மேம்படுத்துகிறது.


செரிமானம் மேம்படும்


தினமும் மஞ்சள் கலந்த நீரைக் குடிப்பதால், அது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, பித்தநீரின் வெளியீட்டையுத் தூண்டும். எனவே நீங்கள் அடிக்கடி செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படுபவராயின், மஞ்சள் நீரை ஏழு நாட்கள் தொடர்ந்து குடியுங்கள்.


வாழ்நாள் நீடிக்கும் மற்றும் முதுமை தடுக்கப்படும்


வயதானதற்கான முக்கியமான காரணிகளில் ப்ரீ-ராடிக்கல்கள் மற்றும் காயங்கள் உள்ளன. ஆனால் மஞ்சளில் உள்ள குர்குமின், இவற்றின் செயல்பாட்டை வெற்றிகரமாக தடுக்கிறது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,