அனைத்துலக குழந்தைகள் நாள்

 அனைத்துலக குழந்தைகள் நாள் (Universal Children's Day) டிசம்பர் 14, 1954 இலிருந்து, ஐக்கிய நாடுகள் மற்றும் யுனிசெஃப் அமைப்புகள் ஆண்டு தோறும் நவம்பர் 20 அன்று கொண்டாடு கின்றன.


உலகெங்கும் உள்ள குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்நாள் ஐநா அவையினால் பிரகடனப்படுத்த ப்பட்டது.
அத்துடன் குழந்தைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான பல பொதுநல திட்டங்களை உலகெங்கும் நடத்துவதற்கும் இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
💥அதே சமயம் பன்னாட்டு குழந்தைகள் நாள் (International Children's Day, ICD) பல நாடுகளில் ஜூன் 1 ம் நாள் கொண்டாடப்படுகிறது. உலக சிறுவர் தினமும் முதியோர் தினமும் இலங்கையில் ஒரே தினத்தில் கொண்டாடப்படுகின்றன.
இந்தியாவில் ஜவகர்லால் நேரு பிறந்த நவம்பர் 14 ஆம் நாளை குழந்தைகள் நாளாகக் கொண்டாடுகிறார்கள்

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி