தத்தெடுக்கப்பட்ட குழந்தையை வாரிசாக குறிப்பிட்டு வாரிசு சான்றிதழ்/அடிப்படை சட்ட தகவல் பகுதி

 தத்தெடுக்கப்பட்ட குழந்தையை வாரிசாக குறிப்பிட்டு வாரிசு சான்றிதழ் வழங்க தாசில்தார் மறுக்க முடியுமா?






மம்தா என்பவர் செளந்தர்யா என்பவரை தத்தெடுத்து உள்ளார். மம்தாவின் கணவர் பெயர் சந்திரசேகர். அவர் இறந்து விட்டார். அதனால் சந்திரசேகரின் வாரிசுகளாக என்னையும், தத்து மகள் செளந்தர்யாவையும் குறிப்பிட்டு வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரி கிருஷ்ணகிரி மாவட்டம் தென்கனிக்கோட்டை தாசில்தாரிடம் மம்தா ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். மனுவை பரிசீலித்த தாசில்தார் தத்தெடுக்கப்பட்ட செளந்தர்யா இறந்து போன சந்திரசேகரின் தத்து மகளாக இருப்பதால் அவர் இரண்டாம் வகுப்பு வாரிசாக தான் வருவார் என்று கூறி வாரிசுச் சான்றிதழ் வழங்க மறுத்து விட்டார்.


அதனால் குறையுற்ற மம்தா மற்றும் மகள் செளந்தர்யா ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். அதுவே இந்த வழக்கு.


தத்தெடுக்கப்பட்ட மகள் இறந்து போன நபருக்கு முதல் வகுப்பு சட்டப்பூர்வ வாரிசாக வர முடியுமா? என்பதை உயர்நீதிமன்றம் பிரதான பிரச்சினையாக எடுத்து பரிசீலித்தது.


இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 3(1)(f) ல் வாரிசு என்பதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.


உயில் மூலம் சொத்துக்களை யாருக்கும் அளிக்காமல் இறந்திருக்கும் ஒரு நபருடைய சொத்துக்களை இந்த சட்டத்தின் கீழ் அடைய உரிமையுள்ள ஆண் அல்லது பெண் நபர் இறந்தவருடைய வாரிசு ஆவார். ஆகையால் யார் ஒருவர் வாரிசுரிமை அடிப்படையில் அல்லது சட்டத்தின் படி இறந்து போனவரின் சொத்துக்களை பெறுகிறாரோ அந்த நபர் இறந்து போனவரின் வாரிசாக கருதப்பட வேண்டும்.


இந்து மகவேற்பு மற்றும் வாழ்க்கை பொருளுதவி சட்டம் பிரிவு 12 ல் மகவேற்பின் விளைவுகள் குறித்து கூறப்பட்டுள்ளது.


மேலே கண்ட சட்டப்பிரிவு குறித்து உச்ச நீதிமன்றம் " ராம்தேவ் வயன்கட் கட்ஜ் Vs சந்திரகாந்த் ரன்பட் கட்ஜ் *(2003-1-CTC-790) (2003-4-SCC-71)" என்ற வழக்கில், சட்டப் பிரிவு 12(c) ல் கூறப்பட்டுள்ளவாறு தத்தெடுக்கப்பட்ட ஒரு குழந்தை தத்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து அந்த குழந்தையைத் தத்தெடுத்த தந்தை அல்லது தாயின் குழந்தையாக கருதப்பட வேண்டும். அதேபோல் தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கு தத்தெடுப்பதற்கு முன்புள்ள சொத்துக்களில் எந்த உரிமையும் இல்லை என்று தீர்ப்பு கூறியுள்ளது



தகவல்களை பகிர்ந்தவர் வழக்கறிஞர். செல்வகுமாரி நடராஜன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,