வாய்ஸ் மெசேஜை திரையில் எழுத்தாகப் பார்க்கும் ஈஸி வழி
வாட்ஸ்அப் டெக்னிக்: வாய்ஸ் மெசேஜை திரையில் எழுத்தாகப் பார்க்கும் ஈஸி வழி
வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது வாடிக்கையாளர்களைக் கவர புதிய வசதியை அறிமுகப்படுத்தும். அண்மையில், வாய்ஸ் மெசேஜ்களை கேட்கும் போது, அதனை விரைவாகக் கேட்கும் வகையில் வேகத்தை அதிகப்படுத்தும் வசதியை வழங்கியது. இருப்பினும், பயனர்களுக்கு அது போதுமானதாக இல்லை.
ஏனென்றால் சில சமயங்களில் நீண்ட நேரம் கொண்டு வாய்ஸ் மெசேஜ்கள் நமக்கு வரும். அதனைப் பொறுமையாகக் கேட்பதற்கு நேரம் இருக்காது. அதே போல, நூலகம் போன்ற இடத்தில் இருக்கும் போதும், வாய்ஸ்நோட்களை கேட்கவே முடியாத நிலையில் இருப்போம். அப்போ நினைப்போம், இது அப்படியே மெசேஜா வந்திருந்தால் நல்லா இருந்திருக்குமுனு நினைப்போம். ஆனால், உண்மையிலே அந்த வசதி உள்ளது.
அனுப்பப்படும் வாய்ஸ் மெசேஜ்களை கேட்கும்போது, அவர்கள் பேசுவது திரையில் எழுத்துகளாகத் தோன்றும் டிரான்ஸ்கிரிப்சன் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வசதி அதிகாரப்பூர்வமாக வாட்ஸ்அப்பில் வரவில்லை. விரைவில் ஐஓஎஸ் தளத்தில் வரவுள்ளது என வாட்ஸ்அப் பீட்டா தகவல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த வசதியை, தற்போதே உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலிலே மூன்றாம் தரப்பு செயலி உதவி மூலம் எளிதாகச் செய்ய முடியும்.
வாட்ஸ்அப்பிற்கான டிரான்ஸ்க்ரைபர் செயலி மூலம் வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ்களை டிரான்ஸ்கிரிப்ஷன் செய்யும் வழியை கீழே காணலாம்
step 1: ‘Transcriber for WhatsApp’ செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
முதலில் இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அந்த செயலி, சாதாரணமாக ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளை மட்டுமே கண்டறியும் திறன் கொண்டது. எனவே, நீங்கள் செயலியில் உள்ள செட்டிங்கிஸூக்கு சென்று ஆங்கிலம், இந்தி போன்ற வேறு மொழிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
step 2 : வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜை ஷேர் செய்ய வேண்டும்.
அடுத்ததாக, உங்களது வாட்ஸ்அப் சாட்டிற்கு செல்ல வேண்டும். அதில், படிக்க விரும்பும் வாய்ஸ் மெசேஜை தொடர்ச்சியாக கிளிக் செய்தால், டாப் ரைட்டில் புதிய ஆப்ஷன்கள் தோன்றும், அதில், மூன்று டாட் கிளிக் செய்து, ஷேர் ஆப்ஷன் கொடுக்க வேண்டும்
Step 3: வாட்ஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப் செய்ய ‘Transcriber for WhatsApp’ கிளிக் செய்ய வேண்டும்.
ஷேர் ஆப்ஷன் கிளிக் செய்ததும், செல்போனில் உள்ள செயலிகளின் பட்டியல் தோன்றும். அதில், Transcriber for WhatsApp செயலிக்கான ஐகானை கிளிக் செய்ய வேண்டும். நீங்கள், செயலிக்கு திரைக்கு மாற்றப்படுவீர்கள். அப்போது, இரண்டு விதமான ஆப்ஷன்கள் தோன்றும், transcribe அல்லது incognito mode இல் கேட்க வேண்டுமா என்பது தான். இதில், நீங்கள் transcribe கிளிக் செய்ய வேண்டும்.
அப்போது, ஏதேனும் விளம்பரங்கள் தோன்றால், அதனை கட் செய்துவிடுங்கள். வாய்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன் முடிந்திட சில நொடிகள் காத்திருக்க வேண்டும்.
அவ்வளவு தான், வாய்ஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப் செய்யப்பட்டு எழுத்துவடிவத்தில் சிறிய பாக்ஸில் திரையில் தோன்றும். நீங்கள் அதனை தேவைப்பட்டால் காப்பி செய்து கொள்ளலாம் அல்லது நேரடியாக ஷேர் செய்துகொள்ளலாம்.
இந்த செயலி நன்றாக வேலை செய்யும் பட்சத்தில், கட்டணம் செலுத்தி விளம்பரமில்லா செயலி சேவையை பெறுங்கள்
Comments