கோதுமை இட்லி செய்வது எப்படி?
அரிசி தேவையே இல்லை... கோதுமை இட்லி செய்வது எப்படி?
கோதுமையில் ரொட்டி, சப்பாத்தி, பூரி செய்து ருசித்திருப்போம்.
மிஞ்சிப்போனால் கோதுமை தோசை செய்திருப்போம்.
ஆனால் இட்லி சுடுவது பலரும் அறியாத ஒன்றாக இருக்கும். இன்று எப்படி கோதுமை இட்லி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கோதுமை- 300 கிராம்
- உளுந்தம் பருப்பு - 75 கிராம்
செய்முறை
கோதுமையை 1 மணி நேரம் ஊற வைத்து நன்றாக ஆட்ட வேண்டும்.
உளுந்தம் மாவையும் நன்றாக வெண்ணெய் போல் ஆட்டிஉப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும்.
8 மணி நேரம் வைத்த பின் இட்லியோ, தோசையோ சுடலாம். கோதுமை இட்லி போன்று தீட்டிய கம்பு, கேப்பைகளிலும் மாவு ஆட்டி இட்லி, தோசை போடலாம்.
இவை மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும். இவைகளுடன் காய்கறி சேர்த்தும் காய்கறி இட்லி தயார் செய்யலாம்.
Comments